hot sale

Thursday, 13 October 2016

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்

உப்பு

உப்பு அல்லது சோடியம், இதய நோய்கள் மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சராசாரிக்கும் அதிகமான அளவில் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி நாம் கூடுதலாக பயன்படுத்தும் உப்பினால், அந்த உணவே நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது.

கைப்பேசிகள்

கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில், ரேடியோ அதிர்வெண்களில் கதிரியக்க மாசுக்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறியுள்ளன. இது சில வகையான புற்றுநோய்களை உண்டாக்கும். அதனால் கைப்பேசிகளை எப்போதும் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் கைப்பேசிக்கு கதிர்வீச்சு தடுப்பை வாங்கவும். இருப்பினும் இதன் திறனைப் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் குடல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை உண்டாக்கலாம். இதுப்போக சருமத்தில் பாதிப்பு மற்றும் தமனிகளில் அடைப்புகளும் ஏற்படும்.

வெள்ளை பிரட்

பாஸ்தாவுடன் சேர்த்த வெள்ளை பிரட் மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவால் செய்யப்பட்ட எந்த ஒரு உணவானாலும் சரி, இரத்தக் கொதிப்பை அவைகள் அதிகரிக்கும். காலப்போக்கில் டைப் 2 சர்க்கரை நோய், இதய குழலிய நோய்கள் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நல்லது என நினைக்கும் விஷயமெல்லாம் கெட்டதாக உள்ளதல்லவா?

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள கசப்புத் தன்மைக்கு காரணம் அதிலுள்ள குகுர்பிடசின்ஸ் எனப்படும் நச்சுப் பொருளாகும். வெள்ளரிக்காயின் இரு பக்க நுனிகளை வெட்டுவதால், வெள்ளரிக்காயின் மற்ற பகுதி குகுர்பிடசின்ஸால் விஷமாக்கப்படுவது குறையும். அதை அப்படியே சாப்பிடுவதால் அனைத்து வகையான வயிற்று புழுக்கள் மற்றும் சுகவீனங்களும் ஏற்படும்.

உட்கார்வது

ஆய்வுகளின் படி, ஒரு நாளில் தொடர்ச்சியாக 3 மணிநேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால், பெரிய அளவிலான ஆரோக்கிய இடர்பாடுகள் ஏற்படும். உறுப்புகளின் பாதிப்பு, தாமதமாகும் எதிர்வினைகள், தசை சீரழிவு, ஏன் மரணம் ஏற்படக்கூடிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம்.

தூக்கம்

அதிகமாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும். தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூங்குபவர்களை விட, 9 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் இடர்பாடு 41% அதிகமாக உள்ளது என தூக்கத்தைப் பற்றிய ஆய்வுகள் கூறியுள்ளது.

சமையலறை மேடை

சமையலறை கிரானைட் மேடை சராசரி அளவை விட அதிகளவிலான ரேடானை வெளியிடுகிறது. ரேடான் வெளிப்பாடுக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பயந்து விடாதீர்கள். இதனால் ஏற்படும் தாக்கத்தினால் நீங்கள் சாவதற்கு 100 வருடங்கள் ஆகும். அதனால் இது மிகவும் மெதுவாக கொல்லும் விஷயங்களில் ஒன்றாகும்.

சோடா பானங்கள்

குளிர் பானத்தில் அனைத்து விதமான செயற்கை உணவு சாயங்களும், பதப்பொருட்களும் (BVO - ப்ராமினேட்டட் வெஜிடபிள் ஆயில் போன்றவைகள்) உள்ளது. இது உங்கள் எடை, பற்கள், சருமம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை போன்றவைகளுக்கும் ஆபத்தே.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

உங்கள் மனம் விரும்பும் உணவுகளான ஸ்பைசி சலாமி துண்டுகள், காக்டைல் சாசேஜ்கள், பன்றி இறைச்சி போன்றவைகள் அனைத்திலும் பதப்பொருட்கள் மற்றும் சேர்க்கைப் பொருட்கள் அடங்கியுள்ளது. இதய நோய், புற்றுநோய், குழந்தைகளின் கற்கும் திறனில் பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது காரணமாக உள்ளது.

டூத் பேஸ்ட்

நாம் பயன்படுத்தும் பல டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் இருப்பது சமீபத்தில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த ரசாயனத்தைப் பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் கூட இது நரம்பியல் மற்றும் இதய பிரச்சனைகள் மற்றும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏர் ஃப்ரெஷ்னர்

ஏர் ஃப்ரெஷ்னர் டப்பாவில் அஸ்பர்டேம், நியோடேம் மற்றும் இதர ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. இவைகள் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் என பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பச்சைப் பால்

பச்சைப் பாலில் போவைன் க்ரோத் ஹார்மோன் என்ற ரசாயனம் உள்ளது. இது மாடுகளில் பாலின் வரத்தை அதிகரிக்க உதவும் ஒரு ரசாயனம். அடிப்படையில் புற்றுநோய், கீல்வாதம் மற்றும் தீவிரமான மைக்ரைன்களை ஏற்படுத்தும் BGH.

நாப்த்தலின் உருண்டைகள்

நாப்த்தலின் உருண்டைகளில் நச்சுமிக்க ரசாயனங்கள் உள்ளது. குறைந்த அளவில் இருக்கும் போது, மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவைகளை இது ஏற்படுத்தும். இவைகள் உங்கள் இரத்தத்தில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்தும் என கருதப்படுவதால் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோவேவ் ஓவன்கள்

இவைகள் சமையலில் வேகமான தீர்வுகளை அளித்து வருகிறது. ஆனால் நாம் பார்க்கப் போவது அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு கசிவை பற்றி. இதனால் பிறப்பு குறைபாடு, புற்றுநோய் மற்றும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மைக்ரோவேவ் செய்யப்பட்ட உணவுகள் உங்கள் இரத்த கொதிப்பை அதிகரிக்கும்.

Thursday, 22 September 2016

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.
இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார்.
நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.
ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.
ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும்.
இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்.
வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.
அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் (H2O) இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது.
இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது. எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்ற அழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.
நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.
மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.
இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகிறது. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.
இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
**************************"***********
**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.
**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.
**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு  மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலை
கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
பழையதை வைத்து.முன்தினம் வடித்த
சோறை நீர்விட்டு அதில் தயிரையும்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன்
கிடைக்கும் என்று.
கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின்
மேல் விரலை வைத்துக்கொண்டு
சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள்
அல்ல அவர்கள் தோவர்களாகத்தான் இருக்க
வேண்டும்.
ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான
இந்த பழையதையும் தயிரையும் உண்டால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து
வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!
என்று பலவிதமான நன்மைகளை
பட்டியலிட்டனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்.
நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும்
பீட்சாவையும் புரோட்டவையும் தேடி
அலைவது போல உலகமே பழையச்சோறை
தேடி அலைந்தது
HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய
நண்பர்களிடமும் இணையத்திலும்
கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம்
பழையச்சோறை புதிய நவீன உணவு
பட்டியலில் சேர்த்தர்வு விட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள்
சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து
வருகிறார்கள்.
அதுபெரிய தவறு வெயில் காலங்களில்
மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு
பழையசோறு.!
சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு
மணிநேரம் கழித்து தேவையான அளவு
தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8
மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய
பொருளான பழையது தயார்.
இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர்
கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது
உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும்
கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு
பாருங்கள்.
ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று
நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள்
தேவர்கள்.!
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க
கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்

Sunday, 18 September 2016

தமிழில்..... தமிழ்

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.
முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது
ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.
ஆனால் தமிழில்.....
தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.

என்று தமிழோடு...
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!

தமிழன் மட்டுமே,
தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!

அனைவருக்கும் பகிருங்கள் . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.

🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

🙏தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

🙏தமிழன்டா..........  
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும் ....

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.'''
************

மகாகவியின் கடைசிப் பயணம்!

மகாகவியின் கடைசிப் பயணம்!💔

இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 95 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் கொண்டிருக்கிறான்.👀

அந்த மகாகவியின் கடைசி நாளையும், அந்த இளஞ்சூரியனைத் தாங்கி இருந்த அவனது பூத உடல் அக்னிக்கு ஆகுதியானதையும் மீண்டும் ஒருமுறை அவனது நினைவு நாளிலே நினைத்துப் பார்ப்போம்.அந்த நாட்களினைப்  பற்றிய நிகழ்வுகளை பாரதிப்  பிரியரும் தமிழறிஞருமான திருவாளர். ரா. அ. பத்பநாபன் அவர்கள் தொகுத்து வழங்கிய  ‘சித்திர பாரதி’ என்னும் நூலில் காணும் இப்பகுதியை நான் இங்கே பகிர்கிறேன்.

யானையின் மூலம் உயிரைக் கவராத யமன், இரண்டு மாதம் காத்திருந்து, வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்.

1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது இரத்தக் கடுப்பாக மாறியது. முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ‘மித்திரன்’ அலுவலகத்திலிருந்து ஓர் சக ஊழியர் வந்து விசாரித்தார்.

சில தினங்களில், சரியாக செப்டம்பர் 12ஆம் தேதி திங்களன்று வேலைக்குத் திரும்புவதாகச் சொல்லி அனுப்பியுள்ளான் பாரதி. அன்றுதான் அந்த இளஞ்சூரியனின் பூத உடல் எரிகாடு சென்றது !

1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்:

“அன்றிரவு பாரதி ‘அமானுல்லா கானைப் பற்றி பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தவர். 1914-18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மாநியருக்குச் சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றிப் பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தார்கள்.  முன்னிரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்”

நெல்லையப்பர், “எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கி விட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார். “கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்” என்றும், “காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா ! சற்றே உன்னை மிதிக்கின்றேன், அட (காலா)” என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்” என்று கூறுகிறார்.

பாரதி காலமானது சரியாக இரவு 1:30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர்.

பாரதியின் மரணச்  செய்தியைப் பொழுது விடிந்ததும்  நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிருஸ்துவப் பாதிரியாராகப்  புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர்.

பாரதி குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவுப் புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவிபுரிந்தார். “பாரதியார் உடலைக் காலை எட்டு மணிக்குத்  திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும், லஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம்.

பாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்ரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.

பாரதியின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு  முன்னர் நண்பர் சுரேந்திரநாத்  ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்” -இவ்வாறு  நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார்.

பாரதிக்குப் ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ நீலகண்ட பிரமச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன, நானா? இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?” என்று மறுத்துவிட்டார்.

முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கர்மங்களைச் செய்தார். பல நூட்ட்ராண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்துத்  தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும், அறிஞர்கள் சிலருமே உணர்ந்திருந்தனர்.

தென் தமிழ்நாட்டில் 1882 டிசம்பர் 11 தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் 1921 செப்டம்பர் 12 ஞாயிறன்று, அதிகாலை 1:30 மணிக்குப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை! சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன!💔

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

🍁திங்கள் – அருகம்புல்☘

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🍁செவ்வாய் – சீரகம்☘

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

🍁புதன் – செம்பருத்தி☘

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🍁வியாழன் – கொத்துமல்லி☘

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

🍁வெள்ளி – கேரட்☘

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

🍁சனி – கரும்பு சாறு☘

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

🍁ஞாயிறு – இளநீர்☘

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...

அன்னாசி பழச்சாறு,கரும்புச்சாறு, இளநீர் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. உணவுக்குப்பின் 2 மணி நேரம் கழித்து குடிக்கவும். பசும்பால் இல்லையென்றால், அதற்கு பதிலாக வேறு பால் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. மற்ற இயற்கை பானங்களை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்னதாக குடிக்கவும்.
🍃🍂🍁🌾🎋☘🎋🌾🍁🍂🍃

குளியல் = குளிர்வித்தல்

குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்
------------------- ------------------
உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது.

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??

உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... !

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
*********"****

**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை,
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார்.

நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R  அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது),

TALK (பேச சொல்வது),

RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)
போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.

அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாமே...

மொன்சாண்டோ - Monsanto

உழவனையும் உலகையும் அழிக்க துடிக்கும் மொன்சாண்டோ - Monsanto. உங்களுக்கு தெரியுமா?. மான்சாண்டோ பற்றி தெரியவில்லை என்றால் கண்டிப்பாக படித்து பகிரவும்...

மான்சாண்டோ இஸ்ரேலிய யூதாவால் உருவாக்கபட்ட ஒரு அமெரிக்க நிறுவனம். இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்ய தொடங்கிய நிறுவனம்.கோகோ கோலா, பெப்சி,யுனிலீவர், லிப்டின் ,நெஸ்லே ஜான்சன் & ஜான்சன் போன்ற அனைத்து உற்பத்தி பொருளுக்கும் தலைமைதான் மான்சாண்டோ.

1901 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சர்வாதிகார நிறுவனம். உலகின் சந்தை அனைத்தும் இவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து உணவு பொருள்களும் இவனிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற சர்வாதிகார நோக்கம்.

உலகில் பசுமை புரட்சி என சொல்லி பாரம்பரிய உணவு வகையை அழித்தது மான்சாண்டோ.

இயற்கை விவசயிகளின் நண்பனான மண் புழுக்களை நம் தேசத்தில் இருந்து அழித்தவனும மான்சாண்டோதான்.

நம் ஊரில் விற்கப்படும் பூச்சிக் கொல்லி,உரம். விதைகள் அனைத்துமே மான்சாண்டோ வசம் இருந்து வருகிறது.
மரபணு மாற்றிய  விதைகள் நம் மண் வளத்தை கெடுக்கிறது. BT என்றும் சொல்லும் கத்தரிக்காய் இவனால் உருவாக்கப் பட்டதே. பார்த்தீனியம் செடி உட்பட

இவனின் மரபணு மாற்றிய விதையை இந்தியாவில் விற்க மோடி அரசும் உடந்தையே. இதில் தெரிந்தே ஈடுபடுகிறார்கள்

சில வேளாண்மை பல்கலைக்கழகம் மான்சாண்டோவிற்க்கு வேலை செய்கிறது.

இவனின் இன்னொரு நோக்கம் மக்கள் தொகை கட்டுப் படுத்தும், ஓரின சேர்க்கையை அதிகப் படுத்துவதும் ஆகும்.

மரபணு மாறிய விதை பயன் படுத்தும் போது விதையில்லா பழங்கள் மட்டுமே கிடைக்கும்.இதனால் நம்மால் பழம் விளைவிக்க இயலாது. அவனிடமே கை ஏந்த வேண்டும்.

இதை தடுக்க இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று போராட வேண்டும். மான்சாண்டோ பொருள்களை வாங்க கூடாது. நம் இயற்கை உழவுத் தொழில் அழிவதற்கு மான்சாண்டோவே காரணம்.

நீங்களே கூகுளில் தேடுங்கள் உண்மை எனில் பகிருங்கள். நம் விவசாயத்தை அழிக்க நாமே துணை நிற்கிறோம்.

ஜல்லிக்கட்டு அழிய வேண்டும் என நினைப்பர்களும் இவர்களே!!!.

மனித நல் சிந்தனைகளை அழிப்பதே இவர்களின் செயல் திட்டம்.

தினம் ஒரு சூப்

தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்

உடல் ஆரோக்கியத்தைப் பெற தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்

கூல்ட்ரிங்க் என்ற பெயரில் கெமிக்கலை குடிப்பதை விட

தினம் ஒரு சூப் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிட்டும்.

ஞாயிறு :-

ஞாயிற்று கிழமை மணத்தக்காளி சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வாய்ப்புண் ,வயிற்றுப் புண் ,வயிற்று வலி குணமாகும்.

திங்கள்:-

திங்கள் கிழமை முடக்கத்தான் சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வாத நோய்கள்,கை,கால், மூட்டுவலி,நாள்பட்ட

இருமல்,மார்பு நோய் ,வீக்கம்,ஆஸ்துமா,காசநோய் ,தலைவலி,காமாலை,

கழுத்து வலி ஆகியவை குணமாகும்.

செவ்வாய்:-

செவ்வாய் கிழமை வெள்ளை முள்ளங்கி சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், சிறுநீரக கோளாறுகள்,,இருமல் ,கல்லடைப்பு,ஆகியவை குணமாகும்.ஆண்மை
பெருகும்.

புதன் :-

புதன்கிழமை சிறு கீரை சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் கண் நோய்கள,புண்கள்,சிறுநீர் எரிச்சல்,வீக்கம்,பித்தநோய் ஆகியவை தீரும். குரல் வளமையடையும்.

உடல் வலிமை பெறும்.

வியாழன்:-

வியாழன் கிழமை அகத்தி கீரை சூப் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

பித்தம் குறையும், சைனஸ் நீங்கும், பீடி,சிகரெட்டினால் உள்ள நஞ்சு நீங்கும்.

வெள்ளி :-

வெள்ளிக்கிழமை முட்டைகோஸ் சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண்,வயிற்று வலி தீரும்.

இரும்பு சத்து நிறைந்தது.

சனி:-

சனிக்கிழமை வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்கள்

இந்த சூப் சாப்பிட்டால் சிறுநீர் கோளாறுகளை போக்கும்.சிறுநீரக

கற்களைக் கரைக்கும்.உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

குறிப்பு:-

சூப் போடும்பொழுது உள்ளி ,பூண்டு,சீரகம்,பெருஞ்சீரகம்,நல்ல மிளகு,

வெந்தயம்,கறிவேப்பிலை,மல்லிக்கீரை,சிறிது உப்பு இவைகளை போட
வேண்டும்.

உள்ளி ,பூண்டு,இவைகளை லேசாக நசுக்கிப் போட வேண்டும்.

மற்றவைகளை ஒரு கரண்டி வீதம் போடவும்.
ஐந்து கரண்டி மல்லியை லேசாக வறுத்து போடவும்.ருசிக்கு
தகுந்த உப்பு போடவும்.

பிற்சேர்க்கை :-

தினசரி இஞ்சி ,பூண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது
நல்லது.

இவைகள் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.

மாரடைப்பை தடுக்கும்.

இரத்த நாள செயல் பாட்டை சரி செய்யும்.                            💐💐💐அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் . 🌺🌻🌷🌼🌿🌱🌴🌳🌲🎄🌸🍀💐                               👏👏👏வாழ்க வளமுடன் 👏👏👏
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
                                            -பகவத் கீதை


🚩🚩யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
                                                                                             -கண்ணதாசன்


🚩🚩வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
                                                                - A .P . J . அப்துல்கலாம்



🚩🚩ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
                                                                 -ஹிட்லர்


🚩🚩அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
                                                                   -A .R . ரகுமான்


🚩🚩தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
                                                                               -நெப்போலியன்


🚩🚩கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
                                                                            -புத்தர்



🚩🚩விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
                                                    -காரல் மாக்ஸ்


🚩🚩வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
                                                                          -பில்கேட்ஸ்


🚩🚩வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
                                                                          -விவேகானந்தர்


🚩🚩நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
                                                                      -விவேகானந்தர்



🚩🚩தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
                                                                -ஸ்ரீ கிருஷ்ணர்



🚩🚩பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
                                                            -சார்லி சாப்பிளின்



🚩🚩உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
                                                             - Lion Francis Leonard



🚩🚩வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
                                                            - Lion Francis Leonard



🚩🚩சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
                                                                - Lion. Francis Leonard


🌹🌹பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
                                                                         -விவேகானந்தர்



💚💚எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
                                                                                      -விவேகானந்தர்

இன்றைய நிலை....

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are majority, even they protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்...

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

அரிசி சோறு ஆபத்தா?

அரிசி சோறு ஆபத்தா? சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி ஆபத்தா???

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்டவட்டமாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நாட்டில் வேதங்களிலும், சீன இலக்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதிகம் உண்டு. கிடைத்திருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது மொத்தத்தில், கிட்டத்தட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் ஆட்சி செய்து வருவதை மறுக்க முடியாது.

ஆனால் இன்றைய நிலைமையோ.. அரிசியா? அய்யயோ..சுகர் வரும்..தொப்பை வரும்... குண்டாயிடுவோம்..என்ற பீதி! இதில் எந்த அளவு உண்மை? அரிசி ஆபத்தானதா? அவசியமில்லாததா?

கிட்டத்தட்ட 4 லட்சம் அரிசி வகைகள் உலகில் இருந்தன. சில மட்டும் இன்னும் இருக்கின்றன.கருப்பு, சிவப்பு, பழுப்பு, பச்சை என பல வண்ணங்களிலும் குட்டை மத்தியம் நெட்டை என வடிவிலும் இருக்கும் அரிசியில் இன்றைய அறிவியல் கலோரிக் கணக்கு என்ன தெரியுமா? 70% கார்போஹைட்ரேட் 6-7% புரதம் 1-2% நார் சத்து 12-13% நீர் மற்றும் சில நுண்ணிய அளவிலான கால்சியம், மக்னீசியம் முதலான கனிமங்கள். கிட்டத்தட்ட கோதுமை, சோளம் முதலான பிற தானியங்களிலும் இந்த அளவில் தான் சத்து விஷயங்கள். புரத அளவில் கொஞ்சம் தூக்கலான்கவும் கார்போஹைட்ரேட் அளவில் லேசான மந்தமும் கோதுமைக்கும் சோளத்திற்கும் உண்டு. இந்த ஒரு விஷயத்தை வைத்து வடனாட்டு கோதுமைக்கும் வெளி நாட்டுச் சோளத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் போக்கு வளர்ந்து வருவது வேதனை.

இங்கு ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தட்டைப்போட்டு அரிசியை குவித்து யாரும் சாப்பிடப்போவதில்லை. அரிசியுடன் பருப்போ, குழம்போ, காயோ, கீரையோ சேர்த்துத் தான் சுவைக்கிறோம். அப்போது அரிசியுடன் சேர்ந்து பருப்பின் புரதமும், காய் கறிகளின் கனிமமும், குழம்பின் சீரணத்தை சீராக்கி, இன்னும் அதன் சத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக குடலுறிஞ்சிகளால் கொண்டு செல்லும் தன்மையும் கிடைப்பது தான் அரிசி கூட்டணியின் அற்புத சிறப்பு அம்சம்..ஒரு வேளை நீங்கள் கார்ன் ஃப்ளேக்ஸில் காரக் குழம்பும் புடலங்காய் பொரியலும் போட்டு சாப்பிட்டாலோ, சப்பாத்திக்கு சாம்பார் ஊற்றி பருப்பு உசிலி சேர்த்து சாப்பிட்டால் அரிசிப் பயனை கொஞ்சம் அடையலாம்.

அரிசி நம் மரபணுக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பரிச்சியமான ஓர் உன்னத உணவு. புதிய உணவுகள் எது வந்தாலும் உடலைப் பொறுத்த மட்டில் எல்லை தாண்டிய ஊடுருவலாக மட்டுமே நம் உடல் கண்காணிக்கும். பெரிய வில்லன் இல்லை என்று தெரிந்த உடன் மட்டுமே அதற்கு இடமளிக்கும். அப்படித்தான் நாம் புது புது உணவுகளை எப்போதாய்ச் சாப்பிட்டாலும் பெரிதாய் எதுவும் துன்பப்படுவதில்லை. அதே சமயத்தில் நமக்கு அன்றாடம் பரிச்சயமான உணவுகளில் இருந்து முற்றிலும் விலகிப் போகும் போது உடம்பு சற்று கலவரப்படும். அரிசி விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்து வருகிறது. பரம்பரை அரிசி ரகங்கள் தொலைந்து போய், கூடுதல் மகசூல் என்ற கொள்கையுடனும், நீடித்த சேமிப்பிற்கென்றும் சொல்லி இந்த பாலிஷ் ரகங்கள் வந்ததில் தான் பிரச்னை துவங்கியது. பூ வச்சி, பொட்டு வச்சி, ஸில்க்கி பாலிஷ் போட்டு அழகுபடுத்த அரிசி என்ன சினிமாவில் நடிக்கவா வந்தது? அப்படித்தான் வணிகர்கள் அரிசி வணிகத்தை வசப்படுத்த, அதனை பட்டை தீட்டி வெண்ணிற முத்தாக்க முயன்றதில், அதன் சத்துக்களில் பல வீணாகி, வெறும் சர்க்கரைச்சத்தை மட்டும் அதிகம் தரும் உணவாக மாறியது அரிசியின் தற்கால அவலம்.

இன்னும் தொலைந்து போகாமல் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆங்காங்கே இருந்து தான் வருகிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கும் மாப்பிள்ளைச் சம்பா எனும் சிகப்பரிசி தெற்கத்தி மாவட்டங்களில் பிரபலம். பிரசவத்திற்குப்பின் பால் சுரப்பிற்கு அதிகம் பயன்படும் நீலச்சம்பா, குழியடிச்சான் அரிசி ரகங்கள் இன்னும் இங்கு உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறை ஊரின் முறுக்கும் அதன் மொறு மொறு ருசிக்கும் அந்த ஊரின் கல்லிமடையான் ரகம் தான் காரணம்.

கைக் குழந்தை பாலில் இருந்து திட உணவிற்கு மாறும் தருவாயில் உடைத்த அரிசிக் குருணை, பாசிப்பருப்பு சேர்த்த குழைந்த கஞ்சி இவற்றுடன் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொடுப்பது குழந்தை உடல் எடை சீராக ஏறப் பெரிதும் உதவும். அதுவும் குறைபிரசவத்தில் ஏழாம் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் இந்த கஞ்சி மிகச் சிறப்பக உதவிடும். குழந்தைக்கு கொடுக்கும் போது பச்சரிசியாகவும் இளையோருக்கு புழுங்கலரிசியாகவும் முதியோருக்கு அவலாகவும் கொடுப்பது அரிசியின் சீரணத்தை தேவைக்கேற்றபடி நெறிப்படுத்தும்.

பாரம்பரிய சிகப்பரிசியின் ’லைகோபின்’- எனும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சத்து அன்றாடம் உடலில் சேர்ந்தால் புற்று நோயின் தாக்கும் வாய்ப்பு குறைவு. சிகப்பரிசியை அவலாகவோ அல்லது புட்டு செய்தோ குழந்தைகட்கும் முதியவருக்கும் அவ்வப்போது கொடுப்பது அவர்கள் நோய் எதிர்ப்பாற்றல் கூட மிக மிக நல்லது.

ஞவரை என்று ஒரு அரிசி ரகம் கேரள அரிசி வகையில் உண்டு. ஆயுர்வேதத்தில் மிக மிக சிறப்பாகப் பேசப்படும் இந்த அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட மூட்டுவலி வாத நோய்களுக்கு மிக நல்லது. கொஞ்சம் ரொம்பவே விலை அதிகமாக விற்கப்படும் இந்த அரிசி கூடுதல் பலனிருப்பதால் விருந்துக் இந்த ஞவரை அரிசிக்கஞ்சியை விசேஷமான நாட்களில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் அரிசி மீதான பழி அதிகம். சோற்றைத் தின்று தின்று இந்த வியாதி வந்திடுச்சு-ன்னு சொல்வது பிரபலமாகி வருகிறது. தவறு அரிசியில் கிடையாது. அதன் அளவிலும், தரத்திலும் அதற்கேற்ற உடலுழைப்பும் இல்லாதது தான். நல்ல உடல் பயிற்சி, நடைப்பயிற்சி அவற்றுடன் கீரை காய்கறி அதிகம் சேர்த்து அளவான தீட்டாத புழுங்கல் அரிசி சாதம் சர்க்கரையை தடாலடியாக உயர்த்திடாது. முழுகட்டு கட்டி சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் 2 மணி நேரம் உறங்குவதும், எப்போதும் டென்ஷனில் அதிகம் நொறுவலுடன் கூடவே ஃபுல் மீஸ் கட்டும் ஆசாமிக்கும், ”நடையா? அதுக்கெல்லாம் நேரமே இல்லை”, எனும் சோம்பேறிகட்கும் தான் அரிசி ஆபத்து. அப்படிப்பட்டவருக்கு, அரிசி என்ன பாற்கடல் அமிர்தம் தந்தாலும் வியாதி நிச்சயமே!

மாறாக அதிகம் கோதுமை உணவை மட்டுமே உடம்பைக் குறைக்கிறேன், சர்க்கரையைக் குறைக்கிறேன் என சாப்பிடும் நம்ம ஊர்க்காரருக்கு மூலம், மலச்சிக்கல் தோல் நோய் வரும் வாய்ப்பு அதிகம். அதற்காக கோதுமை கெடுதி இல்லை. அது வட நாட்டவரின் (குளிர் அதிகமுள்ளவரின்) பிரதான உணவு. நம்மைப் பொறுத்த வரையில், அரிசியைக் குறைத்து ராகி, கம்பு, தினை என சிறு தானியங்களின் பயன்பாட்டை கூட்டுவது நல்லது.

இனி நீங்கள் ஆரோக்கியம் கருதி அரிசி வாங்கச் சென்றால், ரசாயன உரமிடாமல் வளர்த்த ஆர்கானிக் பட்டை தீட்டாத பிரவுன் அரிசி, புழுங்கல் அரிசி, சிகப்பரிச் சம்பா, இன்னமும் கொஞ்சம் தேடிப்பிடித்து பாரம்பரிய அரிசி ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா முதலான அரிசி ரகங்கள் என வாங்கிச் சமையுங்கள்.
அரிசி உங்கள் வீட்டு அமிர்தமாகும்!

குடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது

குடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது!!

நம் வீடுகளில் வாட்டர் பில்டர்-Water Filter எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக்
கருவிகளை வைத்திருக்கிறோம்.

இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு
மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில்
தூசுகளோடு இருக்கும்.

அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம் நல்லவேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள்
நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால்
இந்த தாதுப் பொருட்கள் இந்தக்
குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள
மனிதர்களுக்கு செல்லவில்லையா?

அவர்கள்
நோயோடு இருப்பார்கள் என்று
நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை
பணம் செலவு செய்து சில கருவிகளை
வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே.

அது
தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப்பொருட்கள் ஆகும்.

நீங்கள்
தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது.

பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே,
கொத்து புரோட்டா, சிக்கன் 65, ஆனியன்
ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத
அந்த சின்னச்சின்ன தாதுப் பொருட்களை
ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய
வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர்
செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த
வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில்
உங்களுக்குத் தேவையான தாதுப்
பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில்
சென்று இந்த தூசுகளை மருந்து என்ற
பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப்பொருட்களை பில்டர் செய்யாமல்
குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற
தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை பில்டர் செய்யக் கூடாது.

தண்ணீரை பில்டர் செய்து சாப்பிட்டால்
மனிதருக்கு நோய் வரும்.

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தக் கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing
machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள
அனைத்து தாதுப் பொருட்களையும்
எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக
மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளைச்
செய்து அதைப்
பாட்டிலில்
அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கிச்
சாப்பிடுகிறோம்.

எனவே தயவுசெய்து
பாட்டிலில்
அடைக்கப்பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் Packaged Drinking Water ஐ யாரும் பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும்
முறை என்ன?

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

பில்டர் செய்யக் கூடாது.

பாட்டிலில்
அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப்படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத்
தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த
தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர்
மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ
அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவுசெய்து குழாயில்
வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது,
தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடைநீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக
உள்ளது என TV, பேப்பர் மூலமாகத்
தெரிந்துக் கொண்டோம் என்று பலர்
கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள
அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள,
தண்ணீரை
பாட்டில்
மூலமாக வியாபாரம்
செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுது
தானே நீங்கள் குழாய்த் தண்ணீரைக்
குடிக்காமல்
பாட்டில்
தண்ணீரை வாங்கிக்
குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள்
தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும்
பில்டர் செய்து மற்றும் பாட்டிலில்
அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக
மக்களுக்கு நோய் வருகிறது என்பதை
புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப்
பிரச்சாரம் செய்வது போல கெட்ட
விஷயத்தை பணம் செலவு செய்து
பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு
இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து
மாத்திரை வியாபாரம் செய்வதற்குத்
திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய்த் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும்
சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,
தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒருவேளை நீங்கள் நினைத்தால் உங்களது
மனத்திருப்திக்காக சில காரியங்களைச்
செய்யலாம். நான் கூறுவதுபோல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து
மணி நேரம் வைத்திருந்தால் அந்த
தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக்
கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை
அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் Water Filter வாங்கி
வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும், தினமும்
நாம் ஒரு பானையை உடைத்தால் கூடத்
தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filterஐ யாரும்
பயன்படுத்துவதில்லை.

எனவே
தயவுசெய்து தண்ணீரை மண்பானையில்
வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண்சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால்
வடிகட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான
பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை வடி
கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டுசெய்யும் வைரஸ், பாக்டீரியா
போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக்
கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள்
வரும்பொழுது நமது முன்னோர்கள் எந்த
ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில்
குளிப்பாட்டி குணப்படுத்தியிருக்கிறார்கள்.

எனவே தேவைப்பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.

வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம்
செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத்
தோலை மண்பானைக்குள் இருக்கும்
தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு
பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த
வாழைப்பழத் தோல் மண் பானையில் உள்ள
நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும்,
கெட்ட பொருள்களையும் உறிஞ்சி
எடுத்துவிடுகிறது.

ஆனால் வாழைப்பழத்
தோலை அதிக நேரம் தண்ணீரில்
வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக
மாறிவிடும். எனவே அரை மணி
நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும்.

இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும்
முறையையும் பயன்படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்புப் பாத்திரம்
மூலம் சுத்தப்படுத்தலாம்

செம்பு என்ற உலோகப் பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ
அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு
முதல் ஐந்து மணி நேரம் வைப்பது
மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்ட
பொருட்கள் அழிக்கப்படுகிறது.

எனவே
செம்பு என்ற உலோகத்தின் மூலம்
செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில்
செம்புக் காசுகளை போட்டு வைத்தால்
அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து
வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்
எப்பொழுதுமே அருகில் ஒரு செம்புக்
கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள்.

அவர்களிடம்
சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக
போவதைப் போல நாம் படங்களில்
பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு
அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம்
தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில்
மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,
வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம்
மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை
முறையில் சுத்தம் செய்வதற்கு
வாட்டர் பில்டர்?

சிப்ஸ் சாப்பிடுவதால் உடம்புக்கு ஏற்படும் கெடுதல்கள்

சிப்ஸ் சாப்பிடுவதால் உடம்புக்கு ஏற்படும் கெடுதல்கள்




இரவில் ‘சிப்ஸ்’ கொறித்துக்கொண்டும், ‘ஜோக்’ அடித்துக் கொண்டும் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பது ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் இரவு நேரத்தில் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.


இதை விளையாட்டு ரசிகர்கள் கண்விழித்து டி.வி.யில் பார்ப்பது வழக்கம். அத்துடன் ‘சிப்ஸ்’ போன்ற நொறுக்குத்தீனிகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த நித்திரையை கெடுக்கும். அடிக்கடி விழித்துக் கொள்வதும், தூக்கம் வராமல் புரள்வதும் நேரிடும். பொதுவாக உறக்கத்தின் போது கனவு காணும் போது, கருவிழிகள் அசையும். ஆனால், இரவு நேரத்தில் கொறிப்பதால், கருவிழி அசைவு குறைவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1,600 கலோரியும், பெண் என்றால் 1,400 கலோரியும் உணவு தேவை. இதில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு ‘சிப்ஸ்’ சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. அதாவது 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக ‘சிப்ஸ்’ சாப்பிடுவதால் சராசரியாக 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேருகின்றன. இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது.

நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், இரவில் ஆழ்ந்த உறக்கம் கெட்டு விடும். இந்தியாவைப் பொருத்தவரை ஒருவரது உணவில் 45 சதவீதம் கொழுப்புச்சத்து உணவாகவே இருக்கிறது. இதனுடன் இரவு நேரத்தில் கொறிப்பதால் கொழுப்புச்சத்து அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது. ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல்பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

சிந்தனைத்திறன் குறைதல், கவனம் சிதறுதல், நினைவு மறதி, விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன. இரவு உணவு முடிந்த பின் குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக நொறுக்குத்தீனிகள் கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும். ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேளை உணவு தரும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.

Saturday, 17 September 2016

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்.

Friday, 16 September 2016

சைவமா?அசைவமா?

மாமிசம் மனித உணவா?

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு .

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

3. கால் விரல்கள்:-

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

4. குடல் அமைப்பு:




சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
                       காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:-

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

6. மலத்தின் தன்மை

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
           
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

இனி மனநிலையில் ஆராயலாம்.

1.  வாழும் முறை :

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

2.  இயல்பு :

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

மன இறுக்கம்:-

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )
                உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.    

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்ள வேண்டும்.

Friday, 5 August 2016

வாழை இலை சாப்பாடு

நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
... என்ன பதில் சொல்வது இதற்கு..?
எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..


இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி ,
அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?

Thursday, 4 August 2016

தாம்பூலம்

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது மட்டுமே!

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!


பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....

Tuesday, 2 August 2016

நான் நேசித்த முதல் பெண் அம்மா!

அம்மா! அம்மா!
✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா
சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடா
கண்ணா!

✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்
.
✏ தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை. அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை.

✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.
✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார்.

தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.

✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.

✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!

✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.

✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'.

✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்.

✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்.

✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!

✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.

 நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு.

✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?

✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.

✏ ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்
போனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.

✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.

✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!

✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!

✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை.

என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை.
✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.




✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை.
✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!

✏ 'அம்மா...!' அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!

Monday, 1 August 2016

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!

வெளியே சொன்னால் வெட்க கேடு!!
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!
****************************
நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி:
*****
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

instruments.world
சோறு:
******
தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!

instruments.world
புரோட்டா:
*********
பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

instruments.world

சால்னா :
*******
சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!
instruments.world
ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
****************************

தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.
instruments.world

instruments.world

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.
instruments.world

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

Thursday, 30 June 2016

திரிபலா

திரிபலா என்றால் என்ன ? அதனால் நமக்கு என்ன பயன் ?
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும்.
முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகைஇரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
instruments.world

instruments.world

instruments.world