hot sale

Wednesday, 27 January 2016

யாரையும் குறைவாக எண்ணக்கூடாது

நன்கு படித்த விஞ்ஞானி ஒருவரின் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது..  வொர்க்ஷாப்குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால், அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..  அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் தவறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டன..  இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்..  அப்பொழுது கிழிந்த ஆடைகளோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி “ஒன்றும் இல்லை” நீங்கள் போகலாம்..என்றார்.  அந்த வழிப்போக்கன் கிளம்பத் தயாரானான்… அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்தக் குட்டையில் இவனை விட்டால் வேறு யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்கச் சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்தக் குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள் என்றார்..  ஓ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? நான் அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத் தர ஆட்சேபணை ஏதும் இல்லை..  ஆனால் அதை விட ஒரு சுலபமான வழி இருக்கிறது..  மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டைக் கழற்றி இந்தச் சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லாச் சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.  தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் கூட, இந்தச் சுலபமான வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..  இவருக்கு மூளை இல்லை என்று தப்பாக நினைத்ததற்கு வருந்தி வெட்கத்தில் தலை குனிந்தார்...  நீதி:  யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

புத்திசாலி எங்கிருந்தாலும்‬ ‪தன்காரியத்தைசாதிப்பான்

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு..
நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.
நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..
ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான்.
அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.
அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?
கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.
அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..
ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
‪#‎புத்திசாலிஎங்கிருந்தாலும்‬
‪#‎தன்காரியத்தைசாதிப்பான்‬.

இலவசங்கள் எங்கிருந்து வருகிறது

ஒரு நாய்க்கு ஒரு எலும்பு கிடைத்தது. அந்த நாய் எலும்பு துண்டை கடித்து பார்த்தது. எலும்பு பழசு என்பதால் கல்லு மாதிரி இருந்தது. அதுல இருந்து எதுவும் வரவில்லை.

இருந்தும் அந்த நாய் அத விடாம கடித்துக் கொண்டே இருந்தது. அதனால் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த நாய்க்கு அது தன்னோட ரத்தம் தான் என்று தெரியவில்லை. ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே, நம்ம ரொம்ப சிரமப்பட்டு கடித்ததினால் தான் இதுல இருந்து ரத்தம் வருவதாக நினைத்தது...
அதை மேலும் மேலும் கடித்துக் கொண்டே இருந்தது. அதனால் வாயில் காயம் பெரிதாகி ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது. நாயோ ஆஹா எவ்வளவு ரத்தம் எவ்வளவு சுவை என்று பெருமைபட்டுக் கொண்டது.

தன்னுடைய ரத்தம் தான் என்று தெரியாமால் மீண்டும் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தது... இப்படியே நிறைய ரத்தம் வெளியேறியதால் ஒருநாள் நாய் செத்து போச்சு...

நாமும் இப்படிதான் இலவசங்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே நம்ம ரத்தத்தை நாமே சுவைத்துக் கொண்டு இருக்கிறோம்...

அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது”

முன்னுக்குப்பின் முரணனான வாழ்க்கை!

அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.

 அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை. ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

 மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

 ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

 கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரிக்கிறது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

 முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது. கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

 சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.


 உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.


 உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும்  அவனை குழப்பிவிடுகிறது. இதுதான் உலகமா?

 இதுதான் வாழ்க்கையா?

என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.


    முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா?

 ஆச்சரியங்களா?

என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம். வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை)எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை.

சுகமான வலி

சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்

நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்

வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்

ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக
இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்

என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்

போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளி குதித்திருப்போம்

எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால் வருத்தப்படுவோம்

அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!

பெட்ரோல் விலை

⭕பெட்ரோல்
⭕டீசல்
⭕எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் மாபெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல்!

இன்றைக்கு நாட்டில் அரசுகளே மக்களைச் சுரண்டும் அவல நிலை. அதற்கு மிகப் பெரிய உதாரணம் பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விற்பனை.

ஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர். இதுதான் இதுவரை உச்ச விலை. அந்த தேதிக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 55.07. டீசல் விலை ரூ 37.13.

இன்று ஒரு பேரல் கச்சா விலை 42 டாலர். ஆனால் பெட்ரோல் விலை ரூ 61. டீசல் விலை ரூ 48.

ஒரு பேரல் என்பது 160 லிட்டர் கச்சா எண்ணெய். ஒரு பேரல் கச்சாவிலிருந்து 21 லிட்டர் பெட்ரோல், 80 லிட்டர் டீசல், 6.5 கிலோ எரிவாயு எடுக்கப்படுகிறது. இவை போக மீதமிருப்பது மண்ணெண்ணெய், நாப்தா, டர்பன்டைன், மசகு ஆயில், சல்பர் போன்ற உபரிப் பொருள்களாக எடுக்கப்படுகின்றன. இவை பெட்ரோல், டீசலை விட அதிக விலைக்குப் போகின்றன. இது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் கணக்கு. நாட்டுக்கு நாடு இந்த அளவு மாறுபடும்.

அதாவது வெறும் ரூ 2520 கொடுத்து வாங்கப்படும் ஒரு பேரல் கச்சாவிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் கிடைக்கும் இப்போது பெறப்படும் வருவாய்…

21 லிட்டர் பெட்ரோல் * 61.02  = 1281.42

80 லிட்டர் டீசல் * 48.00     = 3840.00

6.5 கிலோ எல்பிஜி * 405.32  = 2634.45

இதரப் பொருட்கள் மதிப்பு:      =2000.00

மொத்தம்            ரூ   = 9755. 87.

சுத்திகரிப்புச் செலவு:

ஒரு பேரலுக்கு  (லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 6, டீசலுக்கு 4.6)    ரூ  = 494

சுத்திகரிப்புச் செலவைக் கழித்துவிட்டால் ஒரு பேரலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் உப பொருள்கள் மூலம் மொத்தம்: ரூ 9261.87 கிடைக்கிறது (இப்போதுள்ள விலைப்படி). மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலையைக் கழித்துவிட்டால் ரூ 6741.87 லாபமாகக் கிடைக்கிறது.

இதில் 45 – 50 சதவீதம்தான் பெட்ரோல் / டீசலின் விலை. மீதி 50 – 55 சதவீதம் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மூலம் வருவது.

உதாரணத்துக்கு.. பெட்ரோல் விலையில் உள்ள வரிகள்:

சுங்கவரி 4 சதவீதம்
ஆயத் தீர்வை 25 சதவீதம்
வாட் 17 சதவீதம்
டீலர் கமிஷன் 2 சதவீதம்
கல்வி செஸ் 2 சதவீதம்

பெட்ரோல் விலையில் 55 சதவீதம் வரிகள்தான்.

டீசலுக்கான வரிகள்:

சுங்க வரி 7 சதவீதம்
ஆயத் தீர்வை 13 சதவீதம்
வாட் – 12 சதவீதம்
டீலர் கமிஷன் 2 சதவீதம்
கல்வி செஸ் 2 சதவீதம்

டீசல் விலையில் 39 சதவீதம் வரிகள். சில மாநிலங்களில் ஆக்ட்ராய் எனப்படும் உள்நுழைவு வரி விதிப்பார்கள். அங்கே விலை இன்னும் அதிகம்.

எவ்வளவுக்கு விற்கலாம்?

சுத்திகரிப்புச் செலவுடன் சேர்த்து ஒருபேரல் கச்சா விலை இன்றைய நிலவரப்படி 3014 ரூபாய்தான்.

இதில் 21 லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக ரூ 22 என்ற விலை நிர்ணயித்தாலும் ரூ 462 -ம்,

80 லிட்டர் டீசலுக்கு, லிட்டர் ரூ 18 என விலை வைத்தாலும் ரூ 1440-ம்,

ஒரு கிலோ எரிவாயுக்கு ரூ 300 என போட்டாலும் ரூ 1950-ம் கிடைக்கும்.

இதுவே மொத்தம் ரூ 3852 வரை வருகிறது. வாங்கியதை விட ரூ 850 வரை லாபம், பேரலுக்கு.

ஆனால்,

இவர்கள் எப்படி விலை நிர்ணயித்திருக்கிறார்கள் பாருங்கள்.

பெட்ரோல் விலை ரூ 32 + வரிகள் (லிட்டருக்கு ரூ 10 அதிகம்).

டீசல் விலை ரூ 28 + வரிகள் (லிட்டருக்கு ரூ 10 அதிகம்).

ஒருலிட்டர் பெட்ரோல் / டீசலுக்கு எண்ணெய் நிறுவனமே ரூ 10 கூடுதலாக வைத்து விற்கிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட 50 சதவீதம் பல்வேறு வரிகளை விதிக்கின்றன மத்திய மாநில அரசுகள்.

அனைத்து வரிகளையுமே சேர்த்து ரூ 30-க்கு பெட்ரோலை, ரூ 22-க்கு டீசலை விற்றாலுமே எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம், அரசுகளுக்கும் போதிய வருமானம் கிடைக்க வாய்ப்பிருந்தும், கண்மூடித்தனமாக Hyper Price என்பார்களே, அந்த உச்சபட்ச விலையை நிர்ணயித்து மக்களின் வருமானத்தை உறிஞ்சுகின்றன எண்ணெய் நிறுவனங்களும் அரசுகளும்.

இந்திய பெட்ரோலிய முதலாளி அம்பானியை உலகில் நம்பர் 1 பணக்காரனாக உருவாக்க இந்திய மக்களின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. இந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கானவர்கள் அல்ல பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள்.
அவர்களிடம் பெரிய அளவில் கமிசனும் பெறுகின்றனர். இந்நாட்டில் ஒரு ஊழல் அரசியல்வாதிகளாவது முறையாக தண்டனை பெற்றுள்ளனரா?

குறிப்பு: இந்த கணக்கீடுகள் அனைத்தும், இப்போதைய விலை, இப்போதைய சுத்திகரிப்புச் செலவு, இப்போதைய வரிகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டவை!

தவறாமல் அனைவருக்கும் Share செய்யுங்கள்.

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ஏன்?

சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது

Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும்

வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிருவனங்களுக்கு
375 லட்சம் கோடி

அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்

நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது

ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்

அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்

இப்போது புரிகிறதா?

மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை

அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை

மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்

பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்

(இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்
இவ்வளவு காசு ஏது எப்படி வந்தது ஒரு அமைப்புக்கு யோசியுங்கள் மக்களே )

(முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள் அல்லது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்)

வேதாந்தம்

படித்ததில் பிடித்தது.....

* எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.
* ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான்.
* சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால்
ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது.
* அவசியப்பட்டதை வாங்குவான் கணவன்.
ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி.
* மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும்.
சினந்து கொண்டு பரிமாறினால் வாழ்க்கையே விழும்.
* வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.-பெரிதும் திண்டாடுவீர்கள்.
* 'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும்.
* கொண்டவன் துணை உண்டானால்
கொடிய பாம்பும் புடலங்காய்.
* உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும் உபத்திரவம்.
* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
* ஒருவன் பேசுவது மற்றவனுக்கு விளங்காவிட்டால் அது தத்துவம்.
அவன் பேசுவது அவனுக்கே விளங்காவிட்டால் அது வேதாந்தம்.

மரம் நடுங்கள்

மரம் நடுங்கள்

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை மரத்தை நடு.

நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை மரத்தை நடு.

நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.

நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.

வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.

உன்னைவிட்டு யாரேனும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு.

நேதாஜிக்காக செம்பருத்தியினை நடு.

அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.

எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.

அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.

உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.

உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்... நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்கொண்டு....

மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!

மெமரிகார்ட்

மெமரிகார்ட் பற்றிய சில
தகவல்கள் ? ? ?

இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய வேண்டும் ☆★☆

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக
அட்டை என்றும் அது 4,8,16,32GB
என்ற அளவுகளில்
கிடைக்கிறது......!

இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன்
ஒரே அளவுள்ள மெமரிகார்ட்
(4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில்
விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?

(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )
என்று ஒரு போதும்
இருந்துவிடாதீர்கள்......!

ஏனென்றால்
நாம் டிஜிட்டல் உலகத்தில்
இருந்து கொண்டிக்கிறோம்
அதைப்பற்றிய அரிவை நாம்
பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க
வேண்டிய விஷயம்
என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய
தயாரிப்பு நிறுவனத்தின்
பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற
எதாவது ஒரு எண்
குறிப்பிட்டு அதில்
ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள்
தெரிந்து வைத்திருப்பதில்
லை.......!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள
எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுக
ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்
data transfer speedஐ குறிக்கும்
code ஆகும் 4என்ற எண்
எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால்
அது நொடிக்கு 4MB வேகத்தில்
fileஐ transfer செய்யும்
தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!

இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

பிராய்லர் கோழி🐓

📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.


📳 பகிருங்கள் 📳