hot sale

Wednesday, 27 January 2016

யாரையும் குறைவாக எண்ணக்கூடாது

நன்கு படித்த விஞ்ஞானி ஒருவரின் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது..  வொர்க்ஷாப்குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால், அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..  அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் தவறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டன..  இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்..  அப்பொழுது கிழிந்த ஆடைகளோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி “ஒன்றும் இல்லை” நீங்கள் போகலாம்..என்றார்.  அந்த வழிப்போக்கன் கிளம்பத் தயாரானான்… அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்தக் குட்டையில் இவனை விட்டால் வேறு யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்கச் சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்தக் குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள் என்றார்..  ஓ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? நான் அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத் தர ஆட்சேபணை ஏதும் இல்லை..  ஆனால் அதை விட ஒரு சுலபமான வழி இருக்கிறது..  மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டைக் கழற்றி இந்தச் சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லாச் சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.  தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் கூட, இந்தச் சுலபமான வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..  இவருக்கு மூளை இல்லை என்று தப்பாக நினைத்ததற்கு வருந்தி வெட்கத்தில் தலை குனிந்தார்...  நீதி:  யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

No comments:

Post a Comment