hot sale

Monday, 21 March 2016

வரவேற்கத்தக்க முன்னேற்றம்

இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:
சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.
சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன். அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.
தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, 'இது என்ன கதை மிஸ்?' என்றாள்.
'இது தான் நீதிக்கதை...' என்றேன்.
'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டாள். 'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி...' என்றேன்.
'அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றாள்.
'ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.
உடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே... அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்... திருடறது தப்பு இல்லயா?' எனக் கேட்டாள்.
குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. 'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...
'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.
நானும், 'தப்பு தான்!' என்றேன். உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க; இது நீதிக் கதையா?' எனக் கேட்டாள்.
வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?
அக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?' எனக் கேட்டாள். 'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து, 'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.
உடனே அது, 'இருக்கே!' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க... அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்... அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.
இதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.
நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.

instruments.world

instruments.world

மனிதர்கள் கீழே இருக்கிறார்கள்

ஒரு குட்டி கதை.....
ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,
instruments.world

instruments.world

திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன
வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன
அங்கு சில புறாக்கள் இருந்ததன
அவைகளோடு இந்த புறாக்களும்
அங்கு குடியேறின.
சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ்
வந்தது.
தேவாலயம் புதுப்பிக்க தயாரானது
இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .
வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின
சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது
வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.
இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின.
கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.
ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...
அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,
தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான், மசூதிக்கு போன போதும் புறா தான் ",
"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;
குழம்பிய குட்டி புறா "அது எப்படி நாம் எங்கு
போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.
அதற்கு தாய் புறா "இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம்,
இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது..

தரமுள்ள கல்வி

instruments.world

instruments.world
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்க தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

மாற்றம் ஒன்றே மாறாதது...

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

ஒரு தாயின் புலம்பல் கவிதை

instruments.world
வயது வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும்!! அவர்களுக்கே இது நன்றாக விளங்கும்!! 
===========================

தயவு செய்து பொறுமையாக படித்து பாருங்கள் அழுதுவிட்டேன் இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமை படுகின்றேன்,,,,,,,,,,

ஒரு தாயின் புலம்பல் கவிதை,,,,,,,,,,,,
எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !

என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
instruments.world
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !

ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !

ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !

நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!

புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !

இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!

என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !

ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே.....
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம்
வரும்போது - இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !

இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !

எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????

( ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை...)

இது ஏதோ ஒருவர் அனுப்பியது அல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!

நமது தாய், தந்தையை பேனி காப்பது நமது தலையாய கடமை,
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேனிக்காப்போம்.
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.
instruments.world



பெண்களின் காதல்

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும்  அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும்
போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
instruments.world

தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது
அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....

காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய
வைக்கும்போதும்
பெண்களின் காதல்
அழகுதான்....

ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல்
அழகுதான்....

யாரேனும் நம்மை தவறாக பேசும்
போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
வீட்டிற்க்கு
வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும்
போது
பெண்களின் காதல்
அழகுதான்.....

யார்கூடவும் பகிர்ந்து
கொள்ளமுடியாத
விசயங்களை நம்மோடு பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல்
அழகுதான்....

நாம் முதல் முறை காதலை
சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் நம்மை காதல் கண்கள்
கொண்டு
தாக்கும் போது பெண்களின்
காதல்
அழகுதான்...

நம்மோடு வெளியே வரும் போது
யாரும் பார்க்காத போதும்
நம்மை யாரோ பார்த்து
விடுவார்களோ என்று
நம்மையும் சேர்த்து பயமுறுத்தும்
போது
பெண்களின் காதல்
அழகுதான்....

வெண்ணிலா ஐஸ் கிரீம்
டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ்
இதுவே அதிகம் பிடிக்குமென
நம் செலவை சிக்கனம்
செய்யும் போது பெண்களின்
instruments.world
காதல்
 அழகுதான்....

எதுவும் வேணுமா என்று
கேட்டாலும்
நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு
என்று
நம்மளையே அசத்தவைக்கும்
போது
பெண்களில் காதல்
அழகுதான் .....

நம்மோடு பகிர்ந்து கொள்ள
முடியாத
ஆசைகளை படுக்கை அறையில்
தனியாக தலையனையோடு
பகிர்ந்து
கொள்ளும் போது
பெண்களின் காதல்
அழகுதான்....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எரியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எரியும் போதும் பெண்களின்
காதல்
 அழகுதான் ......

இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது
பெண்கள்தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில் .,
ஆண்களின் காதல் தோல்வியை
காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும் .,
ஆனால்
பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
யாருக்குமே தெரியாது
அவர்களுக்கு மட்டுமே
அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
தான் ..

நம் கைகோர்த்து நடக்க
நம் மடிசாய்ந்து உறங்க
நம் தோல் சாய்ந்து அமர
நம் நெஞ்சினில்
சாய்ந்துகொள்ள
நம்மோடு மனம் திறந்து பேச
நம் நெஞ்சினில் இருக்கும்
முடியை
இழுத்து விளையாட
இப்படி கணக்கில்லா ஆசைகள்
இருந்தும்
நாம் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய்
அமர்ந்து
நம்மை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்.... :*

இந்த காதல் வானில்
சிறகொடிந்த
பறவைகளே அதிகம்.,
அதிலும்
ஆண் பறவைகளை விட
பெண் பறவைகளே அதிகம் ..

மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு
மனமில்லாமல் போவது
ஒருவனோடு .,
காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை ..

பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு.....
என்றுமே ஆண்களின் காதலை விட
பெண்களின்
காதலில்தான் அழகும் வலியும்
அதிகம் ..

எதிர் காலத்தில் உங்களுக்கு
மனைவியாக
வருபவர் கூட
யாரோ ஒருவரால் காதலிக்க
பட்டிருக்கலாம்
அதனால் அவர்களையும்
உங்கள் காதலி போல
நினைச்சு நேசிக்கலாமே!!!!

ஏன்
என்றால்
நீங்களும்
ஒருவரை காதலித்து இருக்கலாம்
அதன்
வலி
உங்களுக்கும் தெரியும்
என்பதால்.....💗💗💗



instruments.world

ஆண்

ஆண் அழத் தெரியாதவன் அல்ல..கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..
அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்..
சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின்முன் குழந்தையாய் மாறுபவன்..
காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..
கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டி விட்டு வருந்துபவன்..


*_அப்பாக்கள்..._*
      
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.
அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.
தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا
ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.
அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.
தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا
தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.
வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.
நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.
யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!
ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.
விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.
இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.
ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.
தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.
ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?
பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?
எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?
எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?
முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.
தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?
மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?
பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?
இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?
படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?
வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.
ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.
“எதுக்கும் பயப்படாதே”
“ஒன்றுக்கும் யோசிக்காதே”
“எல்லாம் வெல்லலாம்”
“மனசை தளரவிடாதே”
“நான் இருக்கிறேன்”
இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.
அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.
தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.
அப்பாக்கள் :
➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்
➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்
➡பிள்ளைகளின் அச்சாணிகள்
➡பிள்ளைகளின் சூரியன்கள்
➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்
➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்
➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்
அப்பா:
தூய்மையான
அன்பு,
போலியற்ற
அக்கறை,
நேர்மையான வழிகாட்டல்,
நியாயமான
சிந்தனை,
நேசிக்கத்தக்க உபசரிப்பு,
மாறுதலில்லா நம்பிக்கை,
காயங்களற்ற
வார்த்தை, 
கம்பீரமான
அறிவுரை,
கலங்கமில்லா
சிரிப்பு,
உண்மையான
அழுகை,
என அத்தனையும் உளமகிழ்ந்து
செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுப்பவர் அப்பா.
அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள  அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர்.
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே  தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.
வாழ்த்துக்கள் தந்தையர்களே.

கொங்குநாடு


வாங்..போங்.என மரியாதையோடு நாகரிகத்தையும் கூடவே நாசூக்கான விஷயங்களையும் கற்றுத் தரும் கோவை..
instruments.world


குளிர்ச்சிக்கு கோவை குற்றாலம்.

தேங்காய்க்கு பொள்ளாச்சி,.

கறிவேப்பிலைக்கு மேட்டுப்பாளையம்,

தடதட தறிநெசவுக்கு சோமனூர்


பாத்திரத்திற்கு அனுப்பர்பாளையம்..

கரும்பு,வெல்லத்துக்கு உடுமலைப்பேட்டை

 சிற்பங்களுக்கு திருமுருகன்பூண்டி,

முருகனுக்கு மருதமலை,

 சிவனுக்கு திருமூர்த்திமலை,

அரங்கனுக்கு காரமடை,

பெருமாளுக்கு திருப்பூர் திருப்பதி,

விநாயகனுக்கு ஈச்சனாரி

பாசனத்துக்கு அமராவதி,

தாகத்துக்கு சிறுவாணி,

குளிக்க கொடிவேரி,

ஆடிப்பாட திருமூர்த்தி அருவி,

குரங்கு சேட்டைக்கு குரங்கு அருவி,

மலைகளின் ராணி ஊட்டியாம்,மலைகளின் இளவரசி வால்பாறையாம்..

வடக்கே பத்ரகாளி,

தெற்கே மாசாணி,

மேற்கே மீன்குளத்தி,

கிழக்கே செல்லாண்டி

சிமெண்டுக்கு மதுக்கரை..

சீலைத்துணிக்கு நெகமம்

மஞ்சத்தாலிக்கு உடுமலை முருங்கப்பட்டி,

போர்வைக்கு சென்னிமலை,

வெண்ணெய்க்கு ஊத்துக்குளி,

ஆத்துக்கு அம்பராம்பாளையம்,

பாலத்துக்குப் பெரியபட்டி,

காலேசுக்குக் கிணத்துக்கடவு,

தேருக்குச்.செஞ்சேரிமலை

கள்ளுக்கு கொழிஞ்சாம்பாறை

வைத்தியத்துக்கு தெலுங்குபாளையம்,

பஸ்ஸூக்குக் காந்திபுரம்

மஞ்சளுக்கு ஈரோடு

சந்தனத்துக்கு சத்தியமங்கலம்

நெல்லுக்குத் தாராபுரம்

காளைகளுக்குக் காங்கயம்..

கோவிலுக்குக் கொடுமுடி

ஏழைகளுக்கு ஊட்டி உடுமலைப்பேட்டை

முதலைக்கு அமராவதி

யானைக்குச்சின்னாறு

ரயிலுக்கு போத்தனூரு

சர்க்கரைக்கு மடத்துக்குளம்,

அன்பா பேசுனா அரவணைப்போம்..

ஏமாத்துனா ஏறி மிதிப்போம்😜😜

மூன்றெழுத்து

நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி"..  மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வாழ்க".. "தமிழ்"...!!
தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!