hot sale

Monday, 25 April 2016

நாய்க்கு ஒரு எலும்பு

ஒரு நாய்க்கு ஒரு எலும்பு கிடைத்தது.

அந்த நாய் எலும்பு துண்டை கடித்து பார்த்தது.

எலும்பு பழசு என்பதால் கல்லு மாதிரி இருந்தது.

அதுல இருந்து எதுவும் வரவில்லை.

இருந்தும் அந்த நாய் அத விடாம கடித்துக் கொண்டே இருந்தது.

அதனால் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது.

அந்த நாய்க்கு அது தன்னோட ரத்தம் தான் என்று தெரியவில்லை.

ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே, நம்ம ரொம்ப சிரமப்பட்டு கடித்ததினால் தான் இதுல இருந்து ரத்தம் வருவதாக நினைத்தது...
அதை மேலும் மேலும் கடித்துக் கொண்டே இருந்தது.

அதனால் வாயில் காயம் பெரிதாகி ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது.

நாயோ ஆஹா எவ்வளவு ரத்தம் எவ்வளவு சுவை என்று பெருமைபட்டுக் கொண்டது.
தன்னுடைய ரத்தம் தான் என்று தெரியாமால் மீண்டும் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தது...

இப்படியே நிறைய ரத்தம் வெளியேறியதால் ஒருநாள் நாய் செத்து போச்சு...

நாமும் இப்படிதான் இலவசங்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே நம்ம ரத்தத்தை நாமே சுவைத்துக் கொண்டு இருக்கிறோம்...

அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய
Professional Tax,
Sales Tax,
Central Sales Tax,
Custom Duty,
Income Tax,
Service Tax,
Dividend Distribution Tax,
Excise Duty ,
Municipal & Fire Tax,
Staff Professional Tax,
Cash Handling Tax,
Food & Entertainment Tax,
Gift Tax,
Wealth Tax,
Stamp Duty & Registration Fee,
Interest & Penalty,
Road Tax,
Toll Tax ,
Vat & etc
போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது"
நமது பணத்தை நமக்கே கொடுத்து நம்மை முட்டாளாக்கி அதில் கொள்ளை அடிப்பதை அனுமதிக்கலாமா?

ஜன்னல்..

ஜன்னல்..

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை... 🌺🌺இன்றைய சூழ்நிலையில்

💐வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;

💐புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;

💐சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது;

💐அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;

💐குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;

💐தன்னிலைவிளக்கம் என்பது
தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது;

💐பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது;

💐தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது;

💐தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;

💐பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;

💐காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;

💐கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது;

💐நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;

💐நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது;

💐எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;

💐மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;

💐சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது

நம் வீட்டிலும் பெண்கள் உண்டு

"ஒரு நாட்டு மன்னன்
தன் அரன்மனையில்
நாட்டியம் ஆடவந்த
பெண்ணின் அழகில்
மயங்கி
அவளை
அடைய
ஆசைப்பட்டான்.

"அப்பெண்னோ
மன்னா
நாங்கள்
நடனம்
ஆடுவது
எங்கள்
குல
தொழில்
வேண்டாம் ......

"மன்னா
நாங்கள்
ஆண்டவனுக்கு
தொண்டு
செய்பவர்கள்
என்றாள் ........
"மன்னவனோ
ஆண்டவனும்
அரசனும்
ஒன்று
தான் ......
"நீ
என்
இச்சைக்கு
இணங்கதான்
வேண்டும் ......

"வா
நான்
இந்த
நாட்டிற்க்கே
உன்னை
அரசியாக்குகிறேன்
என்றான் ......
"அப்பெண்
எவ்வளவே
வாதாடியும்
விடவில்லை
மன்னனிடம்
கடைசியில்
ஒப்புக் கொண்டாள் ....

"அப்பெண்
சரி
மன்னா
நாளை
தாங்கள்
என்
வீட்டிற்க்கு
வாங்கள்
விருந்து
வைக்கிறேன் .......
"அமுதுண்டு
பிறகு
சல்லாபிக்களாம்
என்றாள் ......

"மன்னனும்
சென்றான் ....
"அப்பெண்
மன்னனுக்கு
16 வகை
கலரில்
இனிப்பு
வழங்கினாள் .....

"மன்னன்
எனக்கு
சாப்பிட
பொறுமை
இல்லை ......
" நீயே
ஊட்டி விடு
என்று
கூறினான் .....
"அப்பெண்ணும்
ஊட்டி
விட்டாள் .....
"மன்னன்
சுவைத்தான்
விருத்து
முடிந்தது .....

"மன்னனிடம்
கேட்டாள்
மன்னா
16
வகையான
இனிப்பு
சுவைத்தீர்களே
ஒவ்ஒன்றின்
சுவை
எப்படி
இருந்தது
மன்னா .......

"மன்னன்
நிறம்
மட்டுமே
வேறு வேறு
சுவை
ஒன்று
தான்
என்றான் ....

"பெண்
மன்னா
நாங்களும்
அப்படிதான்
பெண்கள்
நிறம்
மட்டுமே
வேறு வேறு
சுவை
ஒன்று
தானே
என்றாள் .....

"மன்னன்
அப்பெண்ணின்
காலில்
விழுந்து
வணங்கினார் ..
"தாயே
என்
அறிவுக்கண்
திரந்தவளே
என்றான் ......

"இது
கதை
அல்ல
உண்மை"

"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....
"பிற பெண்களிடம் பழகும் போது நம்
வீட்டு பெண்ளாக நினைத்து சகோதரிகளிடம்
பழகுவதாக பழகுங்கள் ..

"நட்பு வளரும் பிற பெண்கள் மனதை
காயப்படுத்தாதீர்கள் ....

தண்ணீர் ஒரு வரம்

இந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம்.





உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது.
ஆனால் கூர்ந்து பார்த்தால் இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், நாம் தொலைத்த வளங்கள் ஏராளம். அதில் ஒன்று தண்ணீர். பூமியில் 71% தண்ணீர் உள்ளது. அதில் 99.7% தண்ணீர் மனிதர்களால் பயன்படுத்தமுடியாது.
மீதமுள்ள 0.3% தண்ணீர் மட்டுமே மனிதன் பயன்படுத்த தக்கதாக உள்ளன. அந்தத் தண்ணீரைத்தான் நாம் விவசாயத்திலிருந்து, ராக்கெட் உற்பத்தி வரைக்கும் பயன்படுத்துகிறோம்.
உதாரணத்திற்கு....
ஒரு ஏ4 அளவு பேப்பர் - 11 லிட்டர் தண்ணீர்
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் - 5 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பீர் - 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் - 2500 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பால் - 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் - 118 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜோடி காலணி -  7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் - 1960 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜீன்ஸ் - 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் - 2500 லிட்டர் தண்ணீர்
1.1 டன் எடையுள்ள கார் - 4 லட்சம் லிட்டர் தண்ணீர்
அதிர்ச்சியடையாதீர்கள். இதுதான் உண்மை. அடுத்த உலகப் போர் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கான நீர் அரசியல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, நடந்துகொண்டிருக்கின்றன. எப்படி என்கிறீர்களா? அந்த காரணத்தை,  நாம் இழந்துவிட்ட இரண்டு வளமான ஆறுகள் சொல்லும்.
நொய்யல் ஆறு
திருப்பூர், துணிகளுக்குப் பேர் போன நகரம். ஆனால் அங்கு உற்பத்தி செய்யப்படும் துணி வகைகள் பெரும் பாலும் ஏற்றுமதியே செய்யப்படுகின்றன. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 6000 லிட்டர் தண்ணீரும், ஒரு டி ஷர்ட் தயாரிக்க 1900 லிட்டர் தண்ணீரும் என ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதற்கான தண்ணீரை நம் நீராதாரங்களிலிருந்து எடுப்பதோடு மட்டுமல்லாமல், துணிகளுக்குச் சாயமிட்டப் பிறகு அந்த சாயக் கழிவுகளும் நீர்நிலைகளில்தான் கொட்டப்படுகிறது. இந்தச் சாயக் கழிவுகளால் அழிந்ததுதான் நொய்யல் ஆறு.
பாலாறு
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தோல் பொருட்களைத் தயாரிப்பதற்கான பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றுமதி செய்யும் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் இருந்த தோல் பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரால் பாலாறு நாசமானது.
தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!
ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே.
நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.
நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பெரும்பாலான பொருட்களை உலக நாடுகள் நம் நாட்டிலிருந்துதான் உற்பத்தி செய்து இறக்குமதி செய்துகொள்கின்றன.
மேலும் அந்தப் பொருட்கள் இங்குள்ள எல்லோருக்குமானவையாகவும் இல்லை என்பது மற்றொரு சோகம். பணம் படைத்தவர்கள்தான் ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் திருடு போவதோ, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதோ பெரும்பாலானோருக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அந்த வகையில் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது சோகம். இது மட்டுமா?
இங்கு 10 ல் 9 பேர் ஷவரில் குளிக்க விரும்புகிறார்கள். நம் அன்றாட தண்ணீர் செலவில் ஷவரில் குளிக்க மட்டுமே 27 சதவிகிதத்தை வீணாக்குகிறோம். ஒருவர் ஷவர் மூலம் ஒருமுறை குளிக்கும் தண்ணீரில், குடிசைப் பகுதியினர் ஒரு முழு நாளுக்குப் பயன்படுத்தலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டில் நாம் செய்யும் ஒரு சிங்கிள் ஃப்ளஷில் 12 லிட்டர் தண்ணீர் போகிறது. நகரங்களில் குழாய்களில் உள்ள விரிசல்கள் வழியே 50% நீர் வீணாகிறது.
உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.
நாம் இதுவரை தொலைத்த தண்ணீரை இனி நம்மால் மீட்டெடுக்க முடியாது. ஆனால் இப்போது மிச்சமுள்ள நீர் ஆதாரங்களை நாம் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கு இந்த நிமிடத்தில் இருந்து நமது பணியை துவக்கவேண்டியது அவசியம். இனிவரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து தண்ணீராக இருக்க வேண்டும்.