hot sale

Tuesday, 15 March 2016

கள்ளுண்ணாமை

தென்னங் கள் குடித்தால்
கன்னங் கதுப் பேறும்!
ஒரு மரத்துக் கள் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
பனை மரத்துக் கள் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !

ஆலமரத்துக் கள் குடித்தால்
அலிக்கும் ஆண்மை வரும் !
பொம்மரத்துக் கள் குடித்தால்
பொன்னிறமாய் உடம்பு வரும்.

எம். சியைக் குடித்தால்
எமலோகம் தான் கிடைக்கும் !
மானிட்டர் குடித்தால்
மானம் பறிபோகும் !
கோல்கொண்டா குடித்தால்
குடும்பமே கூறுகெடும் !
ஜின்னைக் குடித்தால்
சீக்கரமே மலடாவாய் !
ரம்மை குடித்தால்
ரத்தம் சுண்டிவிடும் !

கல்யாணி பீர் குடித்தால்
காமாலை வந்து விடும் !
பைவ் தவ்சன் பீர் குடித்தால்
பரிதாபச் சாவு வரும் !
புல்லட் பீர் குடித்தால்
புத்தி பேதலிக்கும் !
கிங் பிசர் பர் குடித்தால்
கிறு கிறுத்துப் போயலைவாய்

பான் பராக் போட்டால்
பைத்தியம் பிடிக்குமடா!
கஞ்சாக் கடித்தால்
கட்டுடம்பும் மெலியுமடா!
மூக்குப்பொடி போட்டால்
மூளையிலே புற்று வரும் !

கள் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !

கள் குடித்துக் கெட்டாரைக்
கேட்ட துண்டா?
கள் குடித்துச் செத்தாரைப்
பார்த்த துண்டா?

எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் கள்ளால் !
எரிசூட்டு நோய் தீரும
பனையின் கள்ளால் !

அதிகாலைக் கள் கடித்தால்
அச்சம் போகும் !
அந்திக் கள் குடித்தால்
ஆயுள் நீளும் !

தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
கள்ளை அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !

கடையேழு வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
கள் விருந்து கொடுத்தன்றோ
கௌவரம் செய்தார்கள் !

வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
கள்ளை அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !

தங்கம் ஜொளித்த
சங்க காலத்து
மங்கையர்கள் எல்லோரும்
கள்ளருந்தி வாழ்ந்ததது- நம்
கண்காணா வரலாறு!

சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய கள் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !

விருந்தாகி மருந்தாகி
விடிகாலை உணவாகி
விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !

மரமேறும் தொழிலாளர்
மண்பாண்டத் தொழிலாளர்
தச்சுத் தொழிலாளர்
குடும்பத்தை எல்லாம்
தாங்கி வளர்த்துகிற
தனிக் கடவுள் கள்ளாகும்

கள்ளைப் பதப்படுத்தி
கடல் கடந்த நாட்டிற்கு
கப்பலிலே அனுப்பி
கணக்கற்ற பணமாக்கி வாழுகிறான்
கண்டித் தீவினிலே

கள்ளைப் பதப்படுத்திக்
காக்கும் உறை போட்டு
ஏற்றுமதி செய்யுங்கள்
ஏராளப் பணங்குவியும் !
தாராளமாய்த்
தமிழ்நாடு செழிப்படையும!;

கள் கட்டி விடுவதனால்
கடும் நோய்கள் அண்டாமல்
தென்னை மரம் அத்தனையும்
குலை குலையாய்க் காய்க்கிறது!

அளவான போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!

அளவான போதை
அளிக்கின்ற கள்ளை
ஏனருந்தக் கூடாது!
ஏனிறக்கக் கூடாது!

கன்னடத்தில் கள் குடித்து
களிப்போடு வாழுகிறான் !
ஆந்திரத்தில் கள் குடித்து
அற்புதமாய் வாழகிறான!
கேரளத்தில் கள் குடித்து
கிற கிறப்புக் காணுகிறான் !
தமிழ்நாட்டிவ் மட்டும் ஏன்
தடையப்பா- அதை
உடையப்பா!

நூற்றிநாற்பத்தெட்டு
உலகத்து நாடுகளில்
நீக்கமறக் கள்ளுண்டு
நிம்மதியாய்க் குடிக்கின்றார் !

அன்று!
ஆடு விற்ற பணம்
அமுதா ஒயின்சுலையும்
மாடு விற்ற பணம்
மாதவி ஒயின்சுலையும்
காடு விற்ற பணம்
கங்கா ஒயின்சுலையும்
காணாமல் போனதடா!

இன்று
பால்ப் பணமெல்லாம் – பிராந்திப்
பால் குடிக்கப் போண்
பாழாகப் போகிறதே!
காய்ப் பணமெல்லாம் – சீசாக்
காய்க் கடைக்குப் போய்
காணாமல் போகிறதே

கொள்ளு விற்ற பணம்
கோட்டர்க் கடையிலே
கோவிந்தோ ஆகுதடா!
எள்ள விற்ற பணம்
எம்.சி.க். கடையிலே
எமலோகம் போகுதடா?

கூலிப் பணமெல்லாம்
கொஞ்சமும் மிஞ்சாமல்
விஸ்கிக் கடையிலே
விரையம் ஆகிறதே!

பீத்தண்ணிப் பிராந்தியினால்
வாந்தி வரும்
வயிர் எரியும்
இரண்டு குடல் செத்து விடும்
ஈரலும் கெட்டு விடும் !

கள்ளுக்கு
விலை குறைவு!
வயிர் நிறைவு!
மன நிறைவு
முகப் பொழிவு – அகத்தெளிவு!

சட்டத்தடை கண்டு
அதிகாரப் படை கண்டு!
பயங் கொண்டு!
முடவன் போல் முடங்கிக்கிடந்தால்
முன்னேற்றம் நமக்கில்லை!

சும்மா இருப்பவனைச்
சுடு காடும் மதிக்காது
சோம்பேறிக் கூட்டத்தை
இடுகாடும் ஏற்காது!

அச்சம் போக்கி!
அடிமைத்தனம் போக்கி!
உச்சப்போராட்டம்
உடன் நடத்தப் புறப்படுங்கள் !

வாழ்ந்தாலும் இம் மண்ணில்
வீரராக வாழ்வோம் !
வீழ்ந்தாலும் இம் மண்ணில்
வீரனாக வீழ்வோம் !

ஆடத்தான் போகின்றோம்
வீர வேட்டை!
அடையத்தான் போகின்றோம்
வெற்றிக் கோட்டை

No comments:

Post a Comment