hot sale

Thursday, 30 June 2016

பூண்டின் பயன்கள்

                பூண்டின் பயன்கள்

♈✝♏🍒சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.

♈✝♏🍒பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.

♈✝♏🍒நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.

♈✝♏🍒இதுமட்டுமல்லாமல் பூண்டு சாப்பிட்ட நான்கு வாரங்களுக்கு பிறகு கொழுப்பின் அளவு 12 சதவீதமாக குறைந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

♈✝♏🍒ரத்தம் உறைந்து ரத்தகட்டிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.

பூண்டு குழம்பு
♈✝♏🍒சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

♈✝♏🍒மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமலும், தேங்காய் வறுக்கும் போது மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும்.

♈✝♏🍒வறுத்தவற்றை ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

♈✝♏🍒பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
♈✝♏🍒நன்கு வதங்கியதும், புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ளவற்றை போட்டு கொதிக்க விட வேண்டும்.

♈✝♏🍒நன்கு கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான பூண்டு குழம்பு ரெடி!

பூண்டு லேகியம்

♈✝♏🍒பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.

♈✝♏🍒வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.

பூண்டு துவையல்

♈✝♏🍒கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

♈✝♏🍒நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

♈✝♏🍒வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின், அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்


No comments:

Post a Comment