யோகா என்பது உடல்,
மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை.
இக்கலை இந்தியாவில் தோன்றி வழி வழியாய் பின்பற்றி வளர்ந்து வரும் ஓர்
ஒப்பற்ற கலையாகும். இது உடலையும் நலத்துடனும்,உள்ளத்தை ஒழுக்கத்துடனும் பேணிக்காக்க உதவுகிறது.
யோகா கலையானது எட்டு முக்கியமான அங்கங்களை கொண்டது.
அவையாவன
1.இமயம்
2.நியமம்
3.ஆசனம்
4.பிராணாயாமம்
5.ப்ரத்யாகாரம்
6.தாரானை
7.தியானம்
8.சமாதி
இமயம் (பின்பற்ற வேண்டியவை) :
- அமைதியை பின்பற்றுதல்
- மனிதர்களையோ, மற்ற உயிரினங்களையோ சார்ந்து வாழாதிருத்தல்
- பேராசை அற்ற நிலையில் இருத்தல்
- பகுத்தறிவுடன்
இருத்தல்
- மற்றவர் பொருள் மீது ஆசை படாதிருத்தல்
நியமம் (கவனிக்க வேண்டியவை):
- உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக
வைத்திருத்தல்
- போதும் என்ற மனம்
கொண்டிருத்தல்(திருப்தி அடைதல்)
- எளிமையுடன் இருத்தல்
- ஒழுக்க நெறிகளை பின்பற்றுதல்
மற்றும் பயிற்றுவித்தல்
- கடவுளை
சரணடைவது(முப்பொழுதும் கடவளுக்கு தொண்டுகள் செய்வது).
ஆசனம்(உடலின் நிலை):
ஆசனங்கள் செய்து உடலை கட்டுக்கோப்பாகவும்,பிணிகள்
இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது.
No comments:
Post a Comment