(அட்டமா சித்தி,சிலம்பம்) தவிர்த்து
Karathe பழக்கப்படுத்தப்பட்டது
(காரம்)மிளகு தவிர்த்து
(மசாலா)மிளகாய் பழக்கப்படுத்தப்பட்டது
தியானம், யோகா தவிர்த்து
PT period(cricket,football etc) பள்ளி கூடம் வாயில் பழக்கப்படுத்தப்பட்டது
(கருப்பட்டி,பனங்கல்கண்டு)
பனைமரம் போதை என்று நம்பவைத்தது பனை அழிக்கப்பட்டு
கரும்பு வளர்ச்சி மாற்று விவசாயமாக
மாற்றி
சக்கரை பழக்கப்படுத்தப்பட்டது
(நல்ல எள் எண்ணெய்
நல்லெண்ணெய் ஆக்கப்பட்டு
(கடலை எண்ணெய்)
கடலெண்ணெய் ஆக்கப்பட்டு
அனைத்தும்
Fat,Cholesterol என்று நம்பவைத்தது
Refined oill,olive oil,Sunflower oil
பழக்கப்படுத்தப்பட்டது
நாட்டு பசும்பால் அழிக்க
ஏறு தழூவுதல்
மஞ்சு விரட்டு ஆனது
மஞ்சு விரட்டு , ஜல்லி கட்டு ஆகி
காளை கரிக்கடைக்கு தயாராக உள்ளது
சிந்து பசு தயாராக உள்ளது இறக்குமதிக்கு
ஊசி போட்டால் போதும் பால் கொடுக்கும்
பின்பு நம்மை ஊசி மட்டுமே போட்டு வாழ்வதற்கும் அதை அவர்கள் போடுவதற்கும் நம்மை தயார் படுத்தி கொண்டு இருக்கிறது உலகம்
உறங்கியது போதும் விழித்துக்கொள் தமிழா
அரசியலும்,ஆடம்பரத்துக்கும்
அப்பாற் பட்டவன் தழிழன் என்று உலக்கு உணர்த்துவோம்
நாகரிகம்,கலாச்சாரம் (Civilization )
இந்த உலகிற்கு கற்று கொடுத்ததே நாம் தான் என்று உணரச்செய்வோம்
தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்
-
எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம் கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத்தெரியவில்லை. வெட்கமில்லாமல் வேறு மொழி கலந்து இன்னொரு தமிழனிடம், அரைவேக்காட்டு ஆங்கிலம் பேசும் சூப்பர் தமிழனாகிவிட்டாய். மொழி கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய்.எதை வைத்து உன்னை நீ தமிழன் எனச்சொல்கிறாய்.....? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாழலாமே!
தமிழா..!!!
உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே........? திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது மட்டுமே நமது பெரும்சாதனையாக இருக்கிறது. உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய் போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.
நீயே அனைத்தையும் இழந்து, தமிழன் என்ற தகுதியை இழந்து, அகதியாகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு நீ எப்படி ஈழத்தமிழனுக்காக போராட முடியும்..........?
ஈழத்தமிழனுக்கு நாடு மட்டும்தான் இல்லை. அதனால் அவன் அகதியாகி விட்டான். உனக்கு நாடு ஒன்று மட்டும் தான் இருக்கிறது. அவனிடமிருக்கும் மொழிப்பற்று, போராட்ட குணம், அரசியல் தெளிவு எதுவுமே உன்னிடம் இல்லை. ஒரு நாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை. இப்போது சொல் யார் அகதி....? நீயா..? ஈழத்தமிழனா...? நீ முதலில் தமிழனாக மாறு. உனக்கு எல்லாமே கிடைக்கும். ஒரு நாளும் ஈழத்தைத் ஆண்டு கொண்டிருக்கிற தமிழக அரசியல்வாதிகளால் பெற்றுத் தரமுடியாது.
அதற்கு இந்திய அரசும் இடம் கொடுக்காது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து உண்மையான தமிழனாக மாறுங்கள். அப்போது இந்திய அரசு உங்களை நோக்கி ஓடிவரும். ஈழம் என்ன, நீ கேட்கும் அத்தனையும் அப்போது உனக்குக் கிடைக்கும். அதுவரை உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.
No comments:
Post a Comment