சக்ராசனம்
சக்ரா - சக்கரம்
இவ்வாசனம் சக்கரத்தை போன்று உள்ளதால் இப்பெயர் பெற்றது
சக்ரா - சக்கரம்
இவ்வாசனம் சக்கரத்தை போன்று உள்ளதால் இப்பெயர் பெற்றது
செய்முறை:
1.விரிப்பின் மேல்
கைகளையும் கால்களையும் நீட்டி மல்லாந்து படுக்கவும்.
2.கைகளிரண்டையும் தலைக்கு
இருபுறமும்,தோல்களுக்கு அருகில் கொண்டு சென்று உள்ளங்கையைத் தரையில் பதிக்கவும்.
3.கால் முட்டிகளை
மடக்கி,கைகளையும்,கால்களையும் தரையில் நன்கு அழுத்தி உடலை உயரேத் தூக்கவும். தூக்க முடிந்த அளவு தூக்கி அரை வட்டமாக இருக்கும்படிச் செய்யவும்.
4.இந்நிலையில் சிறிது நேரமிருந்து விட்டு,பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் :
1.உயர் ரத்த
அழுத்தம்,தூக்கமின்மை ஆகியவை நீங்கும்.
2.நாடி,நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன .
3.பதற்றம்
குறையும்.
4.கை,கால்கள் வலுவடைகின்றன .
5.கூன் முதுகு நிமிர்கிறது.
No comments:
Post a Comment