hot sale

Wednesday, 12 March 2014

ஹாலாசனம்


ஹாலாசனம்
இது மல்லாந்து படுத்துச் செய்யும் ஆசனமாகும், இதனுடைய இறுதி நிலை கலப்பை போன்று உள்ளதால் இப்பெயர் பெறலாயிற்று.



செய்முறை:
1.விரிப்பில் மல்லாந்து படுக்கவும்,கால்களைச் சேர்த்து வைக்கவும்,தலைக்கு மேற்புறம் நன்றாக நீட்டி இருக்குமாறு செய்யவும்.
2.கால்களை மெல்ல உயரே தூக்கவும்.முழங்கால்களை மடக்காமல் தரையிலிருந்து 45 டிகிரிக்குக் கால்கள் சாய்ந்தபடி இருக்குமாறு வைக்கவும்.
3.கால்களை 90 டிகிரிக்குக் கொண்டு வரவும்.
4.கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டு வரவும்.
5.கால்களைப் பின்புறமாக நீட்டிதரையைத் தொடவும் கைகள் நீட்டியவாறு தரையிலிருக்கட்டும்.முகவாய்க்கட்டை நெஞ்சுக் குழியைத் தொட்டுக் கொண்டிருக்கவும்.
பின் மெதுவாக ஆரம்ப நிலைக்குவரவும்.






பலன்கள்:
1.முதுகுத் தண்டு வடம், தண்டு வடத்தின் நரம்புகள் மற்றும் முதுகுத் தசைகள் நீட்டி, இழுக்கப் பட்டு நன்கு செயல்படுகின்றன.
2.இரத்தஓட்ட மிகுதியால் கழுத்து நரம்புகள் பலம் பெறுகின்றன.
3.தைராய்டு சுரப்பிகள் நன்கு செயல்படுகின்றன.
4.இருமல்,சளிபோன்ற நோய்கள் குணமாகின்றன.

குறிப்பு :

1.  உணவு உண்ட பிறகு செய்யக் கூடாது.
2. மாத விடாய்  மற்றும் கர்ப்பிணி பெண்கள் செய்யக் கூடாது.
3. இதயக் கோளாறு மற்றும் உயர் இரத்த  அழுத்தம் ,ஹெர்னியா பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment