hot sale

Wednesday, 12 March 2014

ஏகபாதஹஸ்தாசனம்

ஏகபாதஹஸ்தாசனம்

இதன் இறுதி நிலையில்,ஒரு கால்தலைக்குப் பின்புறமும்,கைகள் கால்களைப் பின்னி பினைப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
 
செய்முறை:


1.கால்களுக்கிடையில் அங்குலம் இடைவெளி விட்டு நிற்கவும்.

2.இடக் காலை கைகளால் பிடித்து மடக்கி,முன்புறம் தூக்கவும்.

3.மூச்சினை வெளியில் விட்டு முன்புறம் குனியவும்.தலை,முழங்கால்களை தொடட்டும்,இந்த நிலையில் ௩௦ விநாடிகள் உய்த்துணர்.

4.மெதுவாக மேலே எழு,மூச்சினை உள்ளிழு.

5.கால்களை எடுத்து பின் ஆரம்ப நிலைக்கு வா.இதே போல் வலது காலை கையால் பிடித்து செய்யவும்.


பலன்கள்:

1.முழங்கால்களின் கடினத் தன்மையை மாற்றி,தசைகளையும்,மூட்டுகளையும் நல்ல முறையில் செயல்பட வைக்கிறது.

2.தண்டுவடத்தில் நெகிழும் தன்மை அதிகரிக்கிறது.

3.தேவையற்ற வயிற்றுத் தசை குறையும்.

4.மலச்சிக்கல் நீங்கும்.

No comments:

Post a Comment