சுப்த வடமொழிச் சொல், இதற்கு சமநிலை என்று பொருள்.
வஜ்ராசன இருக்கையிலிருந்து அப்படியே உடலை சமநிலைப் படுத்துவதால் இப்பெயர் வழங்கலாயிற்று.

செய்முறை:
1.கால்களை நீட்டி உட்கார வேண்டும்.
2.வலக்காலை மடக்கி, பாதம் பின்புறம் பார்த்திருக்குமாறு வைக்க வேண்டும்.
3.இடக்காலை மடக்கி,இரு பாதங்களையும் ஓன்று சேர்த்து, புட்டங்களைக் கிடத்தி அமர்ந்து வஜ்ராசன இருக்கைக்கு வர வேண்டும்.
4.மூச்சினை உள்ளிழுத்தவாறு முழங்கைகளின் உதவியால் மல்லாந்த நிலையில் உடலைக் கிடத்தவும்.
5.சாதரண சுவாச நிலையில் இரு கைகளையும் மடக்கி ஒன்று மீது ஒன்று வைத்து,தலையைக் கிடத்தவும்.இந்த நிலையில் ௩௦ விநாடிகள் நீடிக்கவும்.
6.பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.முதுகும்,இரு கால்களும் வலுவடையும்.
2.முழங்கால்,கணுக்கால் பிடிப்பினை நீக்கும்.
3.வயிறு வழுப்பும் ,வனப்பும் பெரும்.
4.தைராய்டு சுரப்பிக்கு,ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
No comments:
Post a Comment