hot sale

Wednesday, 12 March 2014

பச்சிமோத்தாசனம்

பச்சிமோத்தாசனம்
இவ்வாசனத்த்தின் இறுதி நிலை பறவையின் முகம் போல அமைந்திருப்பதால் இப்பெயர் வழங்கலாயிற்று .


செய்முறை:
1.விரிப்பில் இருக்கால்களையும் நீட்டி உட்கார வேண்டும்.
2.கைகளை மேலே கொண்டு வரவும் உள்ளங்கைகள் முன்புறமாகப்  பார்த்திருக்கட்டும்.மூச்சினை உள்ளிழுக்க வேண்டும்.
3.மூச்சினை வெளியில் விட்ட வாறு உடலை தரைக்கு இணையாகக் கொண்டு வர வேண்டும். கைகள் நீட்டியவாறு இருக்கட்டும்.
4.அப்படியே இரு கைகளாலும் பாதங்களைப் பிடிக்க வேண்டும்.
5.பாதங்களைப் பிடித்த்த படியே, தலையை இரு கைகளினூடே செல்ல வைத்து,முகத்தை முழங்காலில் பதியுமாறு வைக்க வேண்டும்.
6.சாதாரண சுவாஷத்தில் ஒரு நிமிடம் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
பிறகு 4,3,2 வழியாக ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
பலன்கள் :
1.குடல் ,பித்தப்பை,இரைப்பை நன்கு அழுத்தம் பெருன்கின்றன .
2.வயிறு குறைந்து அழகு படும்.
3.கெண்டைக்கால் சதை வலுவதையும்.
4.நீரிழிவு,மூலக் கடுப்பு ,வயிற்று வலி ஆகிய பிணிகள் நீங்கும்.
5.தண்டு வடம் வலையும் தன்மை பெறுகிறது.

No comments:

Post a Comment