hot sale

Wednesday, 12 March 2014

பத்மாசனம்

அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனங்கள்


1.பத்மாசனம்

இதன் இறுதி நிலை தாமரை மலர் போன்று அமைவதால் இவ்வாசனத்திற்கு இப்பெயர் வழங்கலாயிற்று.

செய்முறை:

1.விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும்.

2.வலது காலை மடக்கி இடது பக்கத் தொடையின் மேல் வைக்க வேண்டும்.

3.இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைக்க வேண்டும்.

4.இப்போது உடலை நிமிர்த்தி நேராக உட்கார வேண்டும் .இருபுரங்கைகளையும் முழங்கால்களின் மேல் வளையாமல் வைத்து ஆட்காட்டி விரலைப் பெருவிரலால் மடக்கி மாற்ற விரல்களைக் கீழ் நோக்கியவாறு வைக்கவும்.

5.பார்வை மூக்கின் நுனி வழியே இருக்கட்டும்.இந்நிலையில் சாதாரண சுவாச நிலையில் இருக்க வேண்டும்.



பலன்கள்:
 
1.சிறுநீரகம் நன்றாக செயல்பட உதவுகிறது .

2.ஜீரண சக்தி அதிகரிக்கும்.

3.மூட்டு வலி,மூல நோயின் உபாதைகள் குறையும்.

4.பத்மாசன நிலையிலிருந்துதான் தியானம் மற்றும் பல பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment