hot sale

Wednesday, 12 March 2014

தனுராசனம்

தனுராசனம்

தனுஸ் - வில்லு 
இவ்வாசனம் வில்லின் அமைப்பைக்  கொண்டதால் இப்பெயர் பெற்றது.

செய்முறை:

1.கைகளை முன் நீட்டி உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முகவாய் தரையைத் தொடும்படி குப்புறப் படுக்கவும்.உள்ளங்கால்கள் மேல் நோக்கியிருக்கும் வண்ணம் கால்கள் இணைந்து இருக்க வேண்டும். தலை முதல் பாதம் வரை நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

2.முழங்காலை மடித்து இடது பாதத்தை இடதுகையாலும்,வலது பாதத்தை வலதுகையாலும் பிடிக்கவும்.

3.கைகளையும்,கால்களையும் ஒன்றோடொன்று இழுத்து முதுகுத் தண்டை வளைத்து தலை,மார்பு,தொடை ஆகியவற்றை உயர்த்தவும்,வயிற்றுப் பகுதி மட்டும் தரையில் இருக்கவும்.

4.இந்நிலையில் சிறிது நேரம் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.


பலன்கள்:

1.முதுகுத் தண்டு வளையும் தன்மை பெறுகிறது.

2.அஜீரணம், முதுகுத் தண்டுவலி ,நீரிழிவு,குடல் சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன.

3.இடுப்புத் தசைகள் வலுப்பெறுகின்றன .

4.புத்துணர்ச்சியோடு இருக்க வழி செய்கிறது.

No comments:

Post a Comment