டிருடா உட்காடாசனம்
செய்முறை:
1.இரண்டு கால்களையும் சேர்த்துவைத்து உள்ளங்கைகளை சாமி கும்பிடுவது போல் மார்புக்கு நேரே வைத்து நிற்கவும்.
2.மூச்சை இழுத்துக் கொண்டே கூப்பிய கைகளை தலைக்கு மேலே நேராக உயர்த்தவும்.
3.மூச்சை வெளிவிட்டுக் கொண்டே அதே நிலையில் முழங்கால்களை மடக்கி புட்டங்கள் தரையில் படும் படி உடலைக் கொண்டு வரவும்.
4.இதே நிலையில் சிறிது நேரம் இருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.கால்,பின்பக்கத் தசைகள் வலுவடைகின்றன.
2.முதுகுவலி நீங்குகிறது .
3.இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
No comments:
Post a Comment