hot sale

Wednesday, 12 March 2014

மனித உடலின் அமைப்பு

மனித உடலின் அமைப்பு

உடலும் உயிரும் இசைந்து இணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன்.
·         அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு
·         வியத்தகு ஆற்றல்கலை உள்ளடக்கமாக கொண்ட உயிர்ச் சக்தி
·         குறுகியும்,விரிந்தும்,நுணுகியும் இயங்கத் தக்க அறிவுத்திறன்
இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கரு மூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலையை எய்தியுள்ளன.
ஓர் உயர்ந்த குறிக்கோளோடு மனித இனம் இவ்வுலகுக்கு வந்துள்ளது.
·         மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்வதையும்
·         அறிவியல் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து,ரசித்து அதனோடு ஒன்றி நிறைவுபெற்று, நிலையான அமைதியைப் பெருவதையும் உள் நோக்கமாகக் கொண்டதே மனித வாழ்க்கை.
அறிவியல் உயர்வு பெற்று,உயிரின் மதிப்பையும் சிறப்பையும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆகவே முதலில் மனித உடலின் அமைப்பையும் அதன் இயக்கங்களையும் குறித்து தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் நன்மை பயக்கும்.
மனித உடல் இயங்குவதற்கு உயிர்சக்தி முக்கியமனதாகவும்,மூல காரணமாகவும் இருக்கிறது.உயிர்ச்சக்தி தங்கும் ஒரு பாத்திரம் போல் உடல் அமைப்பு இருக்கிறது.
மனித உடலை நுணுகி ஆராய்ந்தால்,ஐந்து பூதங்களின் அமைப்புக்கு இசைய ஐந்து அடுக்குகளாக அது இருப்பது தெரியவரும்.

பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாசம் என ஐந்து பூதங்களாலான உடலமைப்பில்,
பிருதிவி என்னும் மண்,பரு உடலாகவும்
அப்பு என்னும் நீர்,இரத்தமாகவும்
தேயு என்னும் நெருப்பு,உடல் சூடாகவும்
வாயு என்னும் காற்று,மூச்சாகவும்
ஆகாசம் என்பது உயிர்ச்சக்தியாகவும் இருக்கின்றன.
நீர்,நெருப்பு,காற்று இந்த மூன்றும் சேர்ந்து பருப்பொருளான உடலையும் நுண்பொருளான உயிர்ச் சக்தியையும் இணைந்து அவை நட்போடு இயங்குமாறு செய்கின்றன.
இந்த மூன்று பொருட்களின் இயல்பான் அளவும் தரமும் குறையுமாயின் அவற்றின் சுற்றியக்கத்துத் தடை னேருமாயின் ,உடலில் உயிர்ச் சக்திக்கு அதாவது மின்சார சக்திக்கு அதன் ஓட்டத்தில் தடை ஏற்பட்டு உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் வலியும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.இத்தகைய சீர்குலைவு ஏற்படும் போது அதை வலி என சொல்லுகிறோம்.சீர்குலைவும் அதிகரிக்குமாயின் அந்த அளவுக்கு உயிர்சக்தியின் செலவு அதிகரிக்கிறது.அதை  நோய் என்கிறோம்.இந்த சீர்குலைவு மிகவும் அதிகமாக ஏற்பட்டு உயிர்சக்தி பெரும் அளவில் குறைந்து விடுமாயின் உடலியக்கம் தடைபட்டு அப்படியே நின்றுவிடுவதையே மரணம் என் கிறோம்.
மேலே கூறியவற்றிலிருந்து உடலை நலத்தோடு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும் உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம்,வெப்பம்,காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறு நேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது.இயற்கைச் சக்திகளின் இயக்கத்தாலோ அல்லது ஐம்புலங்களின் இயக்கத்தாலோ இரத்தம்,வெப்பம்,காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது.உணவு,உறக்கம்,உழைப்பு,பாலுறவு இவற்றை மிகையாக பயன்படுத்துவதாலும்,தவறாகப் பயன்படுத்துவதாலும்,புறக்கணிப்பதாலும்,எண்ணத்தை இயற்கையின் இனிமைக்கு முரணாகப் பயன்படுத்துவதாலும்,பல விதத் தொந்தரவுகள் நேரலாம்.
·         பருவ வேறுபாடு,
·         பாரம்பரிய கருவமைப்புப் பதிவு,
·         வானில் கோள்களின் ஓட்டத்திலும் சேர்க்கையிலும் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள்,
இவை இயற்கைச் சக்தியால் நேரும் பாதிப்புகள் ஆகும்.இந்த விளைவுகளிலிருந்து காத்துக் கொள்ள இயற்கை,சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்த தடுப்பு வசதிகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் நலம் கெடுகிறது.பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களாலேயே தடுத்துக் கொள்ள முடியும்.

சில சமயங்களில் நாம் செயல்படும் போது,சந்தர்ப்பவசத்தால் தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம்.இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று.எதிர்ப்புச் சக்தியை(immunity) உயற்த்திக் கொள்ள சில பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.அப்படி செய்வதனால் இயற்கைச் சக்திகளின் விளைவுகளாலும்,நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளாலும் ,உடல் நலக் கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.தவிர்க்க முடியாத காரணங்களால்,நோய்வாய்ப் பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம் நோயை விரைவிலும்,வெற்றிகரமாகவும் குணப்படுத்திக் கொண்டு,உடல் நலத்தை விரைவில் பெற்றிடலாம்.

உடற்பயிற்சிகளில் இரு பகுதிகள் உண்டு:
1.       தேகம் நிற்கும் நிலை(போஸ்சர்)
2.       அசைவுகள்(மூவ்மென்ட்ஸ்)
நாம் முன்பு குறிப்பிட்ட மூன்று தன்மைகளான இரத்தம்,வெப்பம்,காற்று ஆகியவை மனித உடலில் அடுக்குகளாக உள்ளன.அவை புவிமைய ஈர்ப்புச் சக்தியால் செயல்படுகின்றன.உடல் இருப்பு நிலை(போஸ்சர்) மாறுபட்டால் உடலின் ஒரு பகுதி புவி மையத்தை நோக்கியோ அல்லது அதற்கு எதிர்ப்புரத்திலோ இருப்பதால்,இம்மூன்று தன்மைகளின் இருப்பு நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.உடலின் ஒரு பகுதியை புவிமையத்தை நோக்கித் திருப்பினால் அந்த பகுதியில் இரத்தம் சிறிது அதிகமாகப் பாய்கிறது.காற்று சிறிது அதிகமாகப் பாய்கிறது. காற்று சிறிது அதிகமானால்,அது உடலின் மறுபகுதிக்குப் பாய்கிறது.இதோடு கூட முறையான அசைவுகள் மூலம் இந்த மூன்று தன்மைகளும் ஒழுங்குபடுத்தப் படுகின்றன.ஒழுங்கான பயிற்சிகள் மூலம் உடலின் பல பகுதிகள் சுத்தப்படுத்தப் படுகின்றன.சரியான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இயற்கைச் சக்திகளால் விளையும் தீயவிளைவுகளைச் சரிபடுத்திக் கொண்டு உடல் நலத்தைப் பெறலாம்.

நினைவுக்கு எட்டாத காலம் முதற்கொண்டே பருவ நிலை,வாழ்க்கை முறை,இன்னும் இதர பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்சிகள் உருவாகி உள்ளன.முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் (நகரும்) நிலையில் இருந்தால்,அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டன.அந்தக் காலம் இப்போது மாறிவிட்ட்து.விரைவு ,அழுத்தம்,பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.நம்து தேவைகளும் வேறு விதமாகி விட்டன.ஆகவே முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவையாகாது.

No comments:

Post a Comment