hot sale

Wednesday, 12 March 2014

மயூராசனம்

மயூராசனம்

செய்முறை:

1.விரிப்பின் மீது முட்டி போட்டு முன்புறமாகக் குனிந்து நெற்றியால் தலையைத் தொட்டு இருக்கவும்.

2.கால்களைப் பின்புறமாக நீட்டி நுனிக்கால்கள் தரையிலிருக்க முழங்கை முட்டிகள் வயிற்றின் மீது நன்குஅழுத்தட்டும்.

3.உடலின் எடையை உள்ளங்கைகளில் நிறுத்தி நன்கு தரையில் ஊன்றி முழங்கை முட்டியின் மீது உடலை நன்கு அழுத்தி கால்களையும்,தலையையும் மேலே கொண்டுவர வேண்டும்.

4.கால்கள் மடங்காமல் தலையிலிருந்து கால் வரை ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் செய்யவும்.

5.இந்நிலையில் சில நொடிகள் இருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு:

தரையிலிருந்து உடல் எழும்பும் போது சுவாசத்தை உள்ளிழுங்கள்,இறுதி நிலைக்கு வரும்போது சுவாசத்தை தக்க வைக்கவும்.ஆரம்ப நிலைக்கு வரும்போது மூச்சை வெளியே விடுங்கள்.


பலன்கள்:

1.ஜீரண உறுப்புகள்,ஈரல்,மண்ணீரல்,கணையம் இவையாவும் புதிய சக்தியைப் பெறுகின்றன.

2.மன வலிமையைக் கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

3.தோள்பட்டை,மணிக்கட்டு,முழங்கை மூட்டுகள்,கால்கள் வலிமைப் பெறுகின்றன.

4.முதுகுத் தண்டு வலி நீங்குகிறது.

No comments:

Post a Comment